»   »  சரத்தின் பழசிராஜா

சரத்தின் பழசிராஜா

Subscribe to Oneindia Tamil

சரத்குமார் நடிக்கும் முதலாவது மலையாளப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.

தமிழில் 100 படங்களைத் தொட்டு விட்ட சரத்குமார் முதல் முறையாக மலையாளப் படத்தில் நடிக்கிறார். பழசி ராஜா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் மம்முட்டியும் இருக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளது. பழசி ராஜா கேரக்டரில் மம்முட்டி நடிக்கிறார். வயநாட்டைச் சேர்ந்த மாவீரன்தான் பழசி ராஜா. இங்கிலாந்து ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் வீரன் இவன்தான் என்று கூறுகின்றன வரலாற்று சான்றுகள்.

பழசிராஜாவின் தளபதியாக சரத்குமார் நடிக்கிறார். படம் முழுவதும் வருவது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இது. அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க சரத் ஒத்துக் கொண்டாராம்.

பத்மப்ரியாவும் படத்தில் இருக்கிறார். ஆனால் நாயகியாக அல்ல. பாலிவுட்டைச் சேர்ந்த ஒருவர்தான் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பழம்பெரும் மலையாள கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. ஹரிஹரன் படத்தை இயக்குகிறார்.

இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். குரூப் பாடல்களைப் புனைகிறார். கண்ணூரில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறதாம்.

பட பூஜைக்குப் பின்னர் சரத் பேசுகையில், பழசிராஜா போன்ற வரலாற்றுக் கதாபாத்திரம் குறித்த படத்தில் நானும் இருப்பது மிகப் பெரிய கெளரவம். நானும் மம்முட்டியும் இணைவது புதிதல்ல. ஏற்கனவே மெளனம் சம்மதம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளோம்.

இப்போது முதல் முறையாக மம்முட்டியுடன் சேர்ந்து எனது மலையாளப் படம் தொடங்கியுள்ளது. மிகச் சிறந்த படமாக இது வரும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தின் உண்மையான ஹீரோ நானோ அல்லது மம்முட்டியோ அல்ல, இயக்குநரும், கதாசிரியரும்தான் உண்மையான ஹீரோக்கள் என்றார்.

அடக்கம் அமரருள் உய்க்கும்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil