»   »  அழகிரியை வென்ற சரத்

அழகிரியை வென்ற சரத்

Subscribe to Oneindia Tamil

அழகிரி என்ற தனது அடுத்த படத்தின் பெயரை கடும் போராட்டத்துக்குப் பின்ன திரைப்பட சேம்பரில் ஒரு வழியாகப் பதிவு செய்து விட்டார் சரத்குமார்.

அழகிரி என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் சரத்குமார். இந்தப் பெயரை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலரை அணுகினர். ஆனால் இப்பெயரை பதிவு செய்ய முடியாது என்று தயாரிப்பாளர் கவுன்சில் கூறி விட்டது.

கடுப்பாகி விட்டார் சரத்குமார். என்ன காரணம் என்று விசாரித்தபோது, அரசியல் தலைவரின் (வேறு யாரு, முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரிதான்) பெயைரத் தொணிக்கும் வகையில் இது உள்ளதால், அனுமதிக்க முடியாது என்று தயாரிப்பாளர் கவுன்சில் கூறியுள்ளது.

இதைக் கேட்டதும் இன்னும் கடுப்பான சரத்குமார், திரைப்பட சேம்பரை அணுகி அங்கு தனது படத்தின் பெயரைப் பதிவு செய்துள்ளார். இவர்களும் கூட முதலில் யோசித்துள்ளனர். இருந்தாலும் கடுமையாகப் போராடி படப் பெயரை பதிவு செய்துள்ளாராம் சரத்குமார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லயன் படம்தான் அழகிரியாக உருமாறுகிறது. இதில் சரத்துக்கு ஜோடியாக நடிப்பவர் தமன்னா. அரசியல்வாதியாக இப்படத்தில் நடிக்கிறார் சரத்குமார். அவருக்கு உதவும் பெண்ணாக வருகிறார் தமன்னா.

இப்படத்தை தெலுங்கில் டாக்டர் ராஜசேகர், எவடத்தே நகேண்டி என்ற பெயரில் ரீமேக் செய்தார். அங்கும் அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

நடிகர் சங்கத் தலைவருக்கே டைட்டில் பதிவு செய்வதில் பிரச்சினையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil