»   »  அழகிரி டூ நம் நாடு

அழகிரி டூ நம் நாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சரத்குமார் நடிக்க, கனகரத்னா மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் அழகிரி படத்தின் பெயர் நம் நாடு என மாற்றப்பட்டுள்ளது.

போக்கிரி படத்தைத் தயாரித்த நிறுவனம் கனகரத்னா மூவிஸ். தற்போது சரத்குமாரை வைத்து புதிய படம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அழகிரி என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பெயர் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியை குறிப்பிடுவது போல இருப்பதால் பெயரை பதிவு செய்ய முடியாது என்று தயாரிப்பாளர் கவுன்சில் (இதன் தலைவர் ராம.நாராயணன் தீவிர திமுக என்பது தெரிந்ததே) மறுத்து விட்டது.

இதனால் கடுப்பான சரத்குமார் பெயரை மாற்ற முடியாது என்று பிலிம் சேம்பரை அணுகி அங்கு டைட்டிலைப் பதிவு செய்தார். முதலில் அவர்களும் பெயரைப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். ஆனால் சரத் தலையிட்டதால் பெயரைப் பதிவு செய்தனாரம்.

இந்த நிலையில் அழகிரி என்ற பெயரை மாற்றி விட்டார்கள். நம்நாடு என இப்போது பெயர் வைத்துள்ளனராம். எம்.ஜி.ஆர். நடித்த மாபெரும் வெற்றிப் படம் நம் நாடு.

திடீர் பெயர் மாற்றம் குறித்து சரத்திடம் கேட்டபோது, நான்தான் பெயரை மாற்றினேன். யாருக்கும் பயந்து இந்த முடிவை எடுக்கவில்லை. நம் நாடு என்ற பெயர் அழகிரி என்ற பெயரை விட சிறப்பாகவும், வலுவனாதாகவும் இருந்ததால் அந்தப் பெயரை தேர்வு செய்தேன்.

மேலும், சென்டிமென்ட்டாகவும் இந்தப் பெயர் பிடித்திருந்ததால் தேர்வு செய்தேன். எனது திரையுலக வாழ்க்கையில் இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என நம்புகிறேன் என்றார்.

இப்படத்தை சுரேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சரத்தை வைத்து அரசு, கம்பீரம் ஆகிய படங்களைக் கொடுத்தவர். விருதுநகரில் வருகிற 29ம் தேதி காமராஜர் நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. சரத்குமாரின் புதிய கட்சிக்கான அடிக்கல் நாட்டு விழாவாகவும் இது கருதப்படுகிறது.

இதை முடித்து விட்டு நம் நாடு படத்தின் ஷூட்டிங்குக்கு வருகிறார் சரத். சரத்குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார்.

நம் நாடு வெல்லட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil