»   »  சரத் - ராஜசேகர் படங்கள் மோதல்!

சரத் - ராஜசேகர் படங்கள் மோதல்!

Subscribe to Oneindia Tamil


சரத்குமார் நடித்துள்ள நம்நாடு படமும், டாக்டர் ராஜேசகர் நடிப்பில், அவரது மனைவி ஜீவிதா இயக்கியுள்ள உடம்பு எப்படி இருக்கு படமும் ஒரே கதை என்று கூறப்படுவதால் சிக்கல் எழுந்துள்ளது. கோர்ட் உத்தரவுப்படி தங்களது படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப் போவதாக ஜீவிதா கூறியிருக்கிறார்.


கனகரத்னா மூவிஸ் தயாரிப்பில் சரத்குமார் நடித்துள்ள படம் நம்நாடு. இதேபோல டாக்டர் ராஜசேகர் நடிப்பில், அவரது மனைவி ஜீவிதா இயக்கத்தில், அவர்களது சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள படம் உடம்பு எப்படி இருக்கு.

மலையாளத்தில் வெளியான லயன் படத்தின் ரீமேக்தான் உடம்பு எப்படி இருக்கு. இப்படத்தை முதலில் தெலுங்கில் எவடத்தே நக்கேண்டி என்ற பெயரில் ஜீவிதா இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து தமிழிலும் இதை கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இரு படங்களின் கதையும் ஒரே கதை என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நம்நாடு படத் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகினார். ஜீவிதா தரப்பும் நீதிமன்றத்தை அணுகியது. இதில் ஜீவிதாவுக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு வந்துள்ளதாம்.

இதுகுறித்து ராஜசேகரும், ஜீவிதாவும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினர். ஜீவிதா கூறுகையில், நீதிமன்றம் எங்களது படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்து உத்தரவு வழங்கியுள்ளது. மலையாளத்தில் வெளியான லயன் படத்தை தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்க நாங்கள் உரிமை வாங்கியுள்ளோம்.

இருப்பினும் தெலுங்கில் ராஜேசகருக்குப் பொருத்தமான வகையில் கதையை மாற்றி எடுத்தோம். அங்கு அப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழிலும் இப்படத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

ஆனால் தேவையில்லாமல் நாங்கள் பிரச்சினையில் இழுக்கப்பட்டுள்ளோம். இந்தப் பிரச்சினையை விநியோகஸ்தர்கள் அளவில் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சித்தோம். முடியாததால்தான் நீதிமன்றத்தை நாடினோம்.

படத்தை திட்டமிட்ட நாளில் வெளியிட முடியாததால் சில கோடி அளவுக்கு எங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் எங்களுக்கு பெரும் மனக் கஷ்டமும் ஏற்பட்டு விட்டது. அதை சொல்லி மாள முடியாது. அந்த அளவுக்கு சிரமப்பட்டு விட்டோம் என்றார்.

இந்த நிலையில் நம் நாடும், ஜீவிதாவின் உடம்பு எப்படி இருக்கு படமும் ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளதாக தெரிகிறது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more about: rajasekhar, sarathkumar
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil