»   »  சரத்தைக் கவர்ந்த இயக்குநர்

சரத்தைக் கவர்ந்த இயக்குநர்

Subscribe to Oneindia Tamil
Sarathkumar with Jayasudha
சரத்குமாரிடம் கதை சொல்லி அவரை கவர்ந்து விட்டார் புதுமுக இயக்குநர் வை. பாலு. இந்தக் கதையை உடனே படமாக்குகிறோம் என்று அவரிடம் உற்சாகமாக சொல்லியுள்ளாராம் சரத்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தற்போது 1977 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் நடந்த படப்பிடிப்பின்போது காயமடைந்தார் சரத்குமார். இதையடுத்து ஊர் திரும்பியுள்ள சரத் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றிய வை. பாலு என்பவர் சரத்தை சந்தித்து ஒரு கதையைக் கூறியுள்ளார். கதையைக் கேட்டதும் வியப்படைந்த சரத், இந்தப் படத்தில் நிச்சயம் நான் நடிக்கிறேன். 1977 படத்தை முடித்ததும் இந்தப் படம்தான் என்று கூறி விட்டாராம்.

இந்த இடத்தில் பாலு குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல். தனது முதல் படத்தை சரத்தை வைத்துத்தான் இயக்குவது என்ற கொள்கையுடன் இருந்தாராம் பாலு. இதற்காக 3 ஆண்டுகளாக அவர் காத்திருந்தார்.

இந்த நிலையில் பாலுவைக் கூப்பிட்டு கதையைச் சொல்லுமாறு கூறியுள்ளார் சரத். 20 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கினாராம் கதை கேட்க. ஆனால் பாலு கதையைச் சொல்லச் சொல்ல தன்னை மறந்து நேரம் போனது தெரியாமல் கதையைக் கேட்டுள்ளார் சரத். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பாலு கதை சொல்லியுள்ளார்.

கதை சரத்துக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அதன் பிறகே கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தாராம் சரத்.

இந்தப் படத்தை அஷ்டலட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் சம்பூரணம் தயாரிக்கிறார். சம்பூரணத்தின் தங்கை புவனா இப்படத்தில் 2வது நாயகியாக நடிக்கவுள்ளார். சரத்துக்கு ஜோடியாக நடிக்கும் முதல் நாயகியை இனிமேல் தான் தேடவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil