»   »  நமிதா-சரத் 'பாண்ட்'!

நமிதா-சரத் 'பாண்ட்'!

Subscribe to Oneindia Tamil


சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 6 அவதாரங்களில் அசத்தும் 1977 படம் பூஜை போடப்பட்டு தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும் சரத்குமார் வருகிறாராம்.

Click here for more images

சரத்குமார் தனது கனவுப்படம் என்று அடிக்கடி கூறி வந்த படம்தான் 1977. இப்படத்தின் பூஜை தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடந்தது. இப்படத்தில் முதல் முறையாக 6 வித்தியாசமான கெட்டப்களில் சரத் நடிக்கிறார். அதில் ஒன்று ஜேம்ஸ் பாண்ட் 007.

இப்படம் குறித்து சரத் கூறுகையில், நான் அரசியல் கட்சி தொடங்கியதால் அது தொடர்பான படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைப்பதற்காக இப்படத்தில் 6 விதமான கேரக்டர்களில் நடிக்கிறேன். எதிர்காலத்திலும் இது தொடரும்.

1977, எனது கனவுப் படமாகும். நீண்ட நாட்களாகவே ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாகும். அது இந்தப் படத்தில் நனவாகியுள்ளது. இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் 007 போல வருகிறேன்.

இது எனது விருப்பத்திற்காக திணிக்கப்படவில்லை. கதைக்கு இயல்பாகவே பொருந்தி வந்ததால் அந்த வேடத்தில் நடிக்கிறேன்.

1977ம் ஆண்டு நடந்த முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது கதை. அந்த சம்பவம் வரலாற்றில் தவறாக பதியப்பட்டு விடுகிறது. அதை படத்தின் நாயகன் கண்டறிந்து சரியான நிகழ்வாக மாற்றிப் பதிகிறான். இதுதான் கதை என்றார்.

இப்படத்தை ஆர்.எஸ்.கே. என்ற தனது சொந்த நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார் சரத்குமார். படத்தை இயக்கப் போவது திணேஷ்குமார். காமெடிக்கு விவேக் இருக்கிறார்.

படத்தின் நாயகி யார் என்று சொல்ல மறந்துட்டோமே, சாட்சாத் நமீதாதான். 4வது முறையாக சரத்துடன் இப்படத்தில் ஜோடி போடுகிறார் நமீதா. சில பல கண்டிஷன்களை முதலில் அவர் போட்டாலும் முடிவில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். 2வது நாயகியாக வருவது பர்சானா. ஜெயசுதாவும் படத்தில் இருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டுக்கு 1977 ரிலீஸ் ஆகிறதாம்.

Read more about: jamesbond role, pooja, sarathkumar
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil