»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

100வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் சரத். இந்தப்படத்தை எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் படங்களைப் போல சூப்பர்ஹிட்டாக்கியே தீருவது என்ற முடிவுடன் உள்ளார் அவர்.

கடும் நெருக்கடியில் இருந்த "நாட்டாமை நடிகர், ராதிகாவுடன் ஜோடி சேர்ந்த பிறகு தான் பல பிரச்சினைகளிலிருந்து மீண்டார்.ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவருக்கு சமீபத்தில் வெளிவந்த "ஐயாவும் ஓரளவு கைகொடுத்துள்ளார்.

"ஐயா படப்பிடிப்பு முழுவதும் தாமிரபரணி பாயும் திருநெல்வேலிச் சீமையில் தான் நடந்தது. இப்பகுதிகளில் கலந்து கொண்டசரத், அப்படியே சைக்கிள் கேப்பில் தனது அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக் கொண்டார்.

அங்கு எந்தப் பட்டிக்காட்டுக்கு யார் வீட்டுக்கு கூப்பிட்டாலும் சரி, எந்தவித மறுப்பும் சொல்லாமல் சென்று வந்தார். ஷூட்டிங்பார்க்க வருபவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வது, ரசிகர் மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வது என கிட்டத்தட்டஒரு குட்டி எம்.ஜி.ஆரைப் போலவே அவரது நடவடிக்கைகள் இருந்தன.

இதனால் கிட்டத்தட்ட திருநெல்வேலி மாவட்டம் முழுவதையுமே சரத், தனது வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார். சரத்தின்ஷூட்டிங் எங்கு நடந்தாலும் சரி, அங்கு திருவிழாக் கூட்டம் போல மக்கள் மொய்க்கத் தொடங்கினர்.

ஷூட்டிங் முடிந்து திருநெல்வேலியை விட்டு புறப்படவே சரத்துக்கு தோன்றவில்லையாம். அடுத்த படங்களுக்கும்திருநெல்வேலியில் சிறிது காட்சிகளையாவது படமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அன்பு கோரிக்கைவைத்துள்ளார்களாம்.

இது ஒருபுறமிருக்க, 100வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாராம் சரத். அவரது 100வது படத்தை தயாரிக்கப் போவதுராதிகாவின் ராடன் பிக்சர்ஸ்.

எனவே இந்தப் படத்தை வெள்ளிவிழாப் படமாக்கியே தீருவது என்று அவர் சபதமெடுத்துள்ளாராம். தமிழ் திரையுலகில் இந்தசாதனையைப் படைத்தது இரண்டே பேர் தான்.

ஒருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றொருவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆரின் 100வது படம் "ஒளி விளக்கு. இந்தப் படம் எம்.ஜி.ஆருக்கு ஒருவெள்ளி விழாப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு பெரும் புகழையும், பணத்தையும் வாரிக்குவித்த படங்களுள் இதுவும்ஒன்று.

இதற்கு அடுத்த படியாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் 100வது படமான "கேப்டன் பிரபாகரன் அவருக்கு வெள்ளி விழாப்படமாக அமைந்தது. இந்தப்படத்தை இப்போது எந்த தியேட்டரில் திரையிட்டாலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடுகிறதாம்.

தமிழ் திரையுலகில் இந்த இரண்டு ஹீரோக்கள் மட்டும் தான் தங்களது 100வது படத்தை வெள்ளி விழாப் படங்களாக்கி உள்ளனர்.

ரஜினி, கமலஹாசனால் கூட இந்த சாதனையை படைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் 100வது படமான"ராஜ பார்வை வழக்கம் போல அவருக்கு பேரை சம்பாதித்துக் கொடுத்த போதிலும் அவருக்கு பணத்தை சம்பாதித்துக்கொடுக்கவில்லை.

இந்தப் படத்தில் அவர் கண் பார்வை இல்லாதவராக நடித்திருந்தார்.

இதே போல தீவிர ராகவேந்திரர் பக்தரான ரஜினி, தனது 100வது படத்தில் ராகவேந்திரராக நடித்தார். ரஜினியின் இந்த 100வதுபடமும் தோல்வியடைந்தது.

எனவே ரஜினி, கமல் வரிசையில் சேராமல் எம்.ஜி.ஆர்., விஜயகாந்தைப் போல தனது 100வது படத்தை வெள்ளி விழாப்படமாக்கசரத் திட்டம் போட்டு வருகிறாராம்.

படம் ஹிட்டாவது அவரது கையில் மட்டுமில்லையே. நல்ல டைரக்டர் கட்டாயம் வேண்டுமே. இதற்காக அவர் பலடைரக்டர்களின் ஜாதகத்தை இப்போது அலசி வருகிறாராம்.

சரத்தின் ஹிட் லிஸ்டில் இருக்கும் டைரக்டர்களில் முதலாவது இடத்தில் இருப்பவர் கே.எஸ்.ரவிகுமார். இவரது இயக்கத்தில் தான்சேரன் பாண்டியனிலிருந்து நாட்டாமை, நட்புக்காக என சரத்துக்கு பல ஹிட் படங்கள் அமைந்தன.

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தில், தூள் புகழ் அதிரடி டைரக்டர் தரணி. இவரை வைத்து ஒரு மசாலாக் கதையில்நடிக்கலாமா என்றும் சரத் ஆலோசித்து வருகிறாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil