அடுத்த படத்திற்கு தயாரான சரத்குமார்... ஜோடி யாருன்னு தெரியுமா ?

சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவீட்டரையார் ரோலில் நடித்துள்ளார் சரத்குமார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஷுட்டிங் நிறைவடைந்தது. விரைவில் படம் ரிலீசாக உள்ளதாக பதிவிட்டனர்.

சரத்குமாரின் அடுத்த படம்

சரத்குமாரின் அடுத்த படம்

பொன்னியின் செல்வன் நிறைவடைந்ததை அடுத்து தனது வழக்கமான லுக்கிற்கு மாறி உள்ளார் சரத்குமார். பொன்னியின் செல்வனை முடித்த கையோடு, ஓய்வின்றி தனது அடுத்த படமான சமரன் படத்தை துவக்கி உள்ளார் சரத்குமார். புதுமுக இயக்குனர் திருமலை பாலுசாமி இயக்கும் இந்த படத்தை ரோஷ் குமாரின் எம் 360 டிகிரி ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது.

இரண்டு ஜோடிகள்

இரண்டு ஜோடிகள்

இந்த படத்தில் சரத்குமாருக்கு இரண்டு ஜோடிகளாம். சரத்குமாருக்கு ஜோடியாக டைரக்டர் மணிரத்னத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுகாசினி மற்றும் அஸ்வதி ஆகியோர் நடிக்கிறார்கள். சுகாசினி மணிரத்னம், மீனாட்சி என்ற மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

குடும்பங்கள் கொண்டாடும் படம்

குடும்பங்கள் கொண்டாடும் படம்

இந்த படம் பற்றி தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறுகையில், இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். அதே சமயம் இன்றைக்கு உலகிற்கு தேவையான விஷயமாகவும் இருக்கும். பாரம்பரியம் நிறைந்த இந்த படத்தின் கதையை படித்ததும் முதலில் என் மனதில் தோன்றியது சரத்குமார் தான். கதையை கேட்டதும் அவரும் உடனே ஓகே சொல்லி விட்டார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்துவதாக இருக்கும் என்றார்.

தண்ணீர் பிரச்சனை தான் கதை

தண்ணீர் பிரச்சனை தான் கதை

டைரக்டர் திருமலை கூறுகையில், இந்த படம் முழுவதும் ராமநாதபுரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. அங்கு வாழ்க்கை முறை, சூழலை மையப்படுத்தியதாக இருக்கும். தண்ணீர் பஞ்சத்தை பேசுவது தான் இந்த படம். இதற்காக நிறைய ஆய்வு செய்துள்ளேன்.தயாரிப்பாளர் நிறைய சப்போர்ட், நம்பிக்கை கொடுத்துள்ளார் என்றார்.

சரத்குமாருக்கு சரியான கதை

சரத்குமாருக்கு சரியான கதை

மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல விஷயங்களை பேசும் கேரக்டர் சரத்குமாருக்கு. இது அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் கைகொடுப்பதாக இருக்கும் எனவும் டைரக்டர் தெரிவித்தார். நந்தா, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளனர்.ஏவிஎம் கார்டனில் சமரன் படத்திற்கான பூஜை செப்டம்பர் 16 ம் தேதி நடைபெற்றது. இதனை பூஜை ஃபோட்டோக்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சரத்குமார்.

சுகவணம் இசை

சுகவணம் இசை

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு இசையமைத்த வேத்சங்கர் சுகவணம் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஸ்ரீதர் தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். விக்கி வினோத்குமார் சண்டை காட்சியமைக்க உள்ளார். ப்ரொடக்ஷன் டிசைனை ஸ்ரீமன் பாலாஜி கவனிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X