»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விஜயகாந்துடன் தனக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் இருவரும் இணைந்து சுமூகமாகப்பணியாற்றுவதாகவும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

ஐயா படத்திற்கு பூஜை படம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் திருட்டி விசிடி, விஜயகாந்துடனான மோதல், தனதுபுதிய படம் குறித்து சரத்குமார் மனம் திறந்து கூறியதாவது:

திருட்டி விசிடி என்பது திரையுலகினரின் வயிற்றில் அடிக்கும் பிரச்சினையாகும். திருட்டு விசிடி தயாரிப்பவர்களைஎளிதில் தப்ப விடக்கூடாது. குறைந்த பட்சம் 7 ஆண்டுகளாவது தண்டிக்க வேண்டும் என்று மக்களவையில்பேசியிருக்கிறேன்.

இது தொடர்பான விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும். அதற்கு எந்த விதத்திலும் உதவ நான் தயார்.

எனக்கும் விஜயகாந்துக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்த விஷயத்தையும் இரண்டு பேரும்கலந்து பேசிதான் முடிவு எடுக்கிறோம். இரண்டு பேருக்குமே தமிழ் சினிமாவின் மீது அக்கறை இருக்கிறது. மேலும்நாட்டில் எத்தனையோ விவகாரங்கள் இருக்க, விஜயகாந்த்-சரத்குமார் இடையே மோதல் என்று கூறுவதெல்லாம்பிரச்சினையே இல்லை.

நம்மகிட்டே கிராமத்து உணர்வுகள், மனோபாவங்கள் எல்லாம் இன்னும் போயிடலை. அதை மையமாகவைச்சுதான் ஐயா படம் இருக்கும். இந்தப் படத்தைத்தான் இயக்குநர் ஹரி முதலில் இயக்குவதாக இருந்தது. அவர்இயக்குநராக ஆவதற்கு முன்னாடியே இந்தக் கதையை என் கிட்ட சொல்லியிருந்தார்.

அதன்பிறகு அவர் ரஜினியிடம் இந்தக் கதையை சொல்லியிருக்கலாம். அதனால் என்ன? ரஜினி நடிக்க இருந்தபடத்தில் நான் நடித்தால் தப்பா? அப்பா பேச்சை கேட்கிற பிள்ளை பத்திதான் படங்கள் வந்திருக்கு. இதுல மகன்பேச்சைக் கேட்கிற அப்பா. அப்படின்னா மகன் கேரக்டர் எவ்வளவு வெயிட்னு பார்த்துக்கோங்க.

அப்பா, மகன்னு இரண்டையும் நான் பண்றேன். படத்துக்காக ஹரி நிறைய உழைச்சிருக்கார். போட்டோசெஷனுக்கே ரொம்ப மெனக்கெட்டார். நயனதாரா, லட்சுமி, ரோகிணி, பிரகாஷ்ராஜ், நெப்போலியன்னு பெரியநட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கு. படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று சொன்னார் சரத்குமார்.

வாழ்த்துக்கள்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil