For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிசாசு 2 ல் இணைந்த சார்பட்டா பட நடிகர்.. இனி நல்ல நேரம் தான் போங்க !

  |

  சென்னை : இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் திக்கெங்கும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

  ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி ,கலையரசன், ஜான் விஜய், அனுபம்மா என மிகப் பெரிய பட்டாளமே இதில் நடித்திருக்க இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் ராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

  என்ன தீர்ப்பு வேணா வரட்டும்.. நான் அடுத்த பட பூஜையில் பிசி.. வைரலாகும் தனுஷின் டி44 பிக்ஸ்! என்ன தீர்ப்பு வேணா வரட்டும்.. நான் அடுத்த பட பூஜையில் பிசி.. வைரலாகும் தனுஷின் டி44 பிக்ஸ்!

  சார்பட்டா பரம்பரை ரிலீசுக்கு பிறகு சந்தோஷ் பிரதாப்புக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பிசாசு 2ல் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

  உண்மையான வடசென்னை

  உண்மையான வடசென்னை

  காலம் காலமாக படங்களில் வடச்சென்னை என்றால் ரவுடிகளின் கூடாரம் என காட்டிக் வந்த சூழ்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் ஒட்டுமொத்த வடசென்னையின் பிரம்மத்தையே தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மாற்றி இதுதான் உண்மையான வடசென்னை என பலரையும் அறிய வைத்துள்ளார். இந்த வகையில் 70ல் வடசென்னையில் பிரதானமான விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.இப்படத்தின் போஸ்டர் ரிலீஸ் அனால் நாள் முதல் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது .ஆர்யாவின் லுக்கும் ,விளையாட்டு சார்ந்த படம் என்பதாலும் இதற்கு ஆதரவு அதிகமாகவே இருந்து வந்தது.படம் ரிலீஸ் ஆனா நாள் முதல் ஆர்யாவிற்கு நல்ல நேரம் துவங்கிவிட்டது .இப்படம் திரையரங்கில் வெளிவந்திருந்தால் அமோகமாக இருந்திருக்கும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கின்றது.

  சார்பட்டா பரம்பரை ராமன்

  சார்பட்டா பரம்பரை ராமன்

  நடிகர் ஆர்யா இதில் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து மிரட்டியுள்ளார். ஜான் விஜய் ,பசுபதி ,

  கலையரசன், துஷாரா விஜயன், அனுபமா, சபீர், ஜான் கொக்கேன் ஆகியோருடன் இணைந்து இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் இதில் ராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார். சார்பட்டா பரம்பரை குழுவுக்காக விளையாட காத்துக்கொண்டிருந்த ராமன் ஒருகட்டத்தில் அவர்களுக்கு எதிராகவே செயல்படும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் தட்டிச்சென்றார் .

  அடையாளத்தை தேடி

  அடையாளத்தை தேடி

  நடிகர் சந்தோஷ் பிரதாப் முதன் முதலில் பார்த்திபன் இயக்கத்தில் கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தாயம், பயமாயிருக்கு, மிஸ்டர் சந்திரமௌலி, பொதுநலன் கருதி, தேவ்,நான் அவளை சந்தித்த போது, பஞ்சாக்ஷரம், ஓ மை கடவுளே, இரும்பு மனிதன், என் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை தேடி கொண்டிருந்த சந்தோஷுக்கு சார்பாக பரம்பரை மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது. சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு சந்தோஷ் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார் .

  பிசாசு 2

  பிசாசு 2

  இந்த வகையில் இப்பொழுது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2ல் ஒப்பந்தம் ஆகி உள்ளது உறுதியாகி உள்ளது. பிசாசு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி வருகிறார் இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா இதில் பேயாக நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நடிகர் சந்தோஷ் பிரதாப் பிசாசு 2ல் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவிலேயே தமிழ் சினிமாவில் அனைவரும் மெச்சும் மிகச்சிறந்த நடிகராக சந்தோஷ் வருவார் என ரசிகர்கள் பாராட்டுக்களையம்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

  பிசாசு 2 - ANDREA வுக்கு பாடியிருக்கேன் | SINGER PRIYANKA CHAT | FILMIBEAT TAMIL
  தொடர்ந்து ஹாரர்

  தொடர்ந்து ஹாரர்

  ஹாரர் படமான பிசாசு திரைப்படம் பெரியவர்களை மட்டும் அல்லாமல் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தது .விமர்சன ரீதியாகவும்,வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது .அதனால் பிசாசு 2 படத்திற்கும் அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கின்றது .மிஸ்கின் படம் என்றாலே நல்ல கதை அம்சம் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.பொதுவாக மிஸ்கின் படத்தில் நடிக்கும் நடிகர்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனித்துவமாக காணப்படுவார்கள்.அந்த வகையில் சந்தோஷ் பிரதாப் இந்த பிசாசு 2 படத்தில் இணைந்திருப்பது இவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க படமாக இருக்கும் என்று மிகவும் அதிகமாக எதிர்பார்க்க படுகின்றது.சந்தோஷ் பிரதாப் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் அதற்கான உடல் மொழி ,மற்றும் மனதை மிகவும் பக்குவபடுத்தி மெனக்கெடுவதில் வல்லவர். உடல் பயிற்சி ,யோகா என்று அன்றாடம் கவனம் செலுத்தி வித்யாசமான கதாபாத்திரங்களையும் ,நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.இருப்பினும் தனக்கென ஒரு அங்கீகாரம் இன்னும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்று இருந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்து இவரது நடிப்பு வேளைக்கு தீனிபோட்டுஉள்ளது.அதே போல் பிசாசு 2 படமும் நல்ல அங்கீகாரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அனைவரின் கருத்தாக உள்ளது.

  English summary
  Director Mysskin has roped in Sarpatta Parambarai fame Santosh Pratap in his Pisasu 2.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X