»   »  'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில்..மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி?

'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில்..மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி போலீஸ் வேடமேற்று நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. 'கொம்பன்', 'மெட்ராஸ்', 'தோழா' என்று ஹாட்ரிக் ஹிட்டடித்த கார்த்தி அடுத்ததாக 'காஷ்மோரா' வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

60 கோடி பட்ஜெட்டில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியிருக்கும் காஷ்மோராவை தீபாவளிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Sathuranga Vettai Vinoth Team up with Karthi

காஷ்மோராவைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் 'காற்று வெளியிடை' படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக 'சதுரங்க வேட்டை' புகழ் வினோத்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக 2011 ம் ஆண்டு வெளியான 'சிறுத்தை' படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Karthi next Play a Police Officer in Sathuranga Vettai Vinoth Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil