»   »  கதகளி ராஜ்!

கதகளி ராஜ்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கெட்டப்பில் வம்புச்சண்ட படத்தில் கலக்கியுள்ளார் சத்யராஜ்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கெட்டப் போடுவது என்பது சாதாரணமான ஒன்று. அந்தக் காலத்தில் சிவாஜி கெட்டப் மன்னனாக திகழ்ந்தார். பின்னர் அந்த இடத்துக்கு கமல் வந்தார். இப்போது விக்ரம், சூர்யா, அஜீத் என பலரும் கெட்டப் சேஞ்ச் செய்து அசத்துகிறார்கள்.

இந்த வரிசையில் சத்யராஜும் இப்போது இணைந்துள்ளார். நிஜ சத்யராஜுக்கும், சினிமாவில் வரும் சத்யராஜுக்கும் நிறைய வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

சத்யராஜ் சாதாரணாக நடிப்பதே ஒரு கெட்டப் சேஞ்ச்தான். காரணம் அவரது 90 சதவீத படங்களில் விக் வைத்துத்தான் நடித்துள்ளார். அந்த வகையில் அதிக படங்களில் விக் வைத்து நடித்த ஒரே நடிகர் அவர்தான்.

மகா நடிகன் படத்தில் எம்.ஜி.ஆர்., இயேசு நாதர், ஹிட்லர் என விதம் விதமான கெட்டப்களில் வந்து கலக்கினார். இப்போது வம்புச்சண்ட படத்தில் இன்னும் படு வித்தியாசமான ஒரு கெட்டப்பில் வருகிறாராம் சத்யராஜ்.

ராஜ்கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கேரளாவின் பாரம்பரியக் கலையான கதகளி நடனக் கலைஞர் வேடத்தில் ஒரு காட்சியில் வருகிறார் சத்யராஜ். இந்த வேடத்தில் தமிழில் ஒரு நடிகர் வருவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வேடத்தைப் போடுவதற்காக பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் என்ற ஊரிலிருந்து நான்கு கதகளி மேக்கப் கலைஞர்களை ஷூட்டிங் நடந்த ஹைதராபாத்துக்கு வரவழைத்து மேக்கப் போட்டுள்ளனர்.

இந்த மேக்கப்பை படுக்க வைத்துத்தான் போட முடியும். இதற்காக கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் படுத்தபடி கிடந்தாராம் சத்யராஜ். அதிகாலையில் ஆரம்பித்து 9 மணிக்குத்தான் மேக்கப் போட்டு முடித்தார்களாம்.

கதகளி கெட்டப்பில் நடனம் ஆடுவதோடு, ஒரு சண்டைக் காட்சியிலும் அதே கெட்டப்பில் கலக்கியுள்ளாராம் சத்யராஜ். இந்தக் காட்சி படத்துக்கு பலம் சேர்க்கும் என்பதால் சிரமப்பட்டு மேக்கப் போட்டுக் கொண்டாராம் சத்யராஜ். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இதுபோல மேக்கப் போட்டு அந்தக் காட்சியை படமாக்கினார்களாம்.

இதுபோலவே பெரியார் படத்துக்காக, பெரியார் மேக்கப் போட்டபோதும் சிரமப்பட்டுத்தான் நடித்தார் சத்யராஜ். அதாவது பெரியார் குள்ளமானவர். ஆனால் சத்யராஜ் உயரம்தான் உலகம் அறிந்ததே. இதனால் பெரியார் வேடத்தில் நடித்தபோது முதுகை குறுக்கிக் கொண்டு சிரமப்பட்டு நடித்தாராம் சத்யராஜ்.

கல்யாணமாகிப் போகப் போகும் தியா நடித்துள்ள கடைசிப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil