»   »  சத்யராஜின் காவல் சாதனை

சத்யராஜின் காவல் சாதனை

Subscribe to Oneindia Tamil

நடிப்பில் சத்யராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு ஹீரோவாக, காவல்துறை அதிகாரியாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து புதிய சாதனை படைத்துள்ளாராம் சத்யராஜ்.

விஜயகாந்த்தான் காவல்துறை அதிகாரி வேடங்களில் அதிகம் நடித்தவர் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் சத்யராஜுக்குத்தான் அந்த சாதனை கிடைத்துள்ளது.

இதுவரை அவர் 12க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளாராம். கடமை கண்ணியம் கட்டுப்பாடு முதல் பெருமாள்சாமி ஐ.பி.எஸ் படம் வரை சத்யராஜ் பல விதமான காவல்துறை அதிகாரி வேடங்களில் அசத்தியுள்ளார்.

தற்போது சிவலிங்கம் ஐ.பி.எஸ் என்று புதிய படத்தில் கலக்கல் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யராஜின் தோழரான ராஜ்கபூர் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் சத்யராஜுடன் ஜோடி போடுவது சொர்ணமால்யாவாம். இருவரும் இணையும் முதல் படமும் இதுவே. ஜெயேந்திரர் சர்ச்சையில் சிக்கிய பின்னர் சொர்ணமால்யா மீது ஒரு மாதிரியான அபிப்ராயம் பரவி விட்டது.

அதிலிருந்து மீள அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும். மொழி படம் மூலம் தான் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபித்தார் சொர்ணமால்யா. இப்போது அவரைத் தேடி நிறையப் படங்கள் வருகிறதாம்.

அப்படி வந்த வாய்ப்புதான் சிவலிங்கம் ஐ.பி.எஸ். முதல் முறையாக பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்தப் படத்தின் மூலம் பின்னி எடுக்க காத்துள்ளாராம் சொர்ணமால்யா.

வால்டர் வெற்றிவேல் மாதிரி சிவலிங்கமும் விறைப்பாக இருப்பாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil