»   »  இனி 'நோ' லொள்ளு! - சத்யராஜ்

இனி 'நோ' லொள்ளு! - சத்யராஜ்

Subscribe to Oneindia Tamil
Satyaraj
பெரியார் படத்திற்குப் பின்னர் இனிமேல் லொள்ளும் ஜொள்ளுமாக நடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து வந்த சத்யராஜ், ஒன்பது ரூபாய் நோட்டுக்குப் பிறகு, இனிமேல் 'சுத்தபத்தமான' கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டாராம்.

லொள்ளு ராஜ்யத்தில், தனிக்காட்டு ராஜாவாக பவனி வந்தவர் சத்யராஜ். எல்லோருக்கும் வயதான காலத்தில் வாய்ப்புகள் தட்டிப் போகும். ஆனால் சத்யராஜுக்கோ வாய்ப்புகள் வந்து குவிந்தன.

நக்கலும், நையாண்டியுமாக ஓடிக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு பெரியார் வேடத்தைக்கொடுத்து நடிக்க வைத்தனர். இனிமேல் பெரியார் என்றால் சத்யராஜ்தான் ஞாபகத்திற்கு வருவார் என்ற அளவுக்கு தத்ரூபமாக நடித்து கலக்கியிருந்தார் சத்யராஜ்.

பெரியார் படத்திற்குப் பிறகு திரையுலகைச் சேர்ந்த பலரும், திரையுலகைச் சேராதவர்களும், இனிமேல் லொள்ளு, ஜொள்ளு, அடிதடி கேரக்டர்களில் நடிக்க வேண்டாம் என்று சத்யராஜை அன்புடன் கேட்டுக் கொண்டனர். அவரும் அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறி வைத்தார்.

இருந்தாலும் இடையில் தங்கம் என்ற படத்தில் நடித்து வந்தார் சத்யராஜ். இதில் வழக்கமான சத்யராஜ் நடிப்புதான். இந்த நிலையில்தான் சத்யராஜின் மனை சுத்தமாக மாற்றியிருக்கிறது தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு.

இப்படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பும், மாதவ படையாச்சியாக தான் நடித்ததற்கு கிடைத்த பாராட்டுக்களும் சத்யராஜை நெகிழ வைத்துள்ளதாம்.

இதற்கு மேலும் தயங்கக் கூடாது, இனிமேல் விளையாட்டுத்தனமான கேரக்டர்களில் நடிக்கவே கூடாது, இதுபோன்ற நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு தீர்மானமாக வந்து விட்டாராம் சத்யராஜ்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil