twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யராஜூக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம் நாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.இந்து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.கதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    By Staff
    |

    நாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:


    நாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.

    இந்து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.

    கதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.

    திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X