»   »  விஜய் சேதுபதி நடிக்கும் தர்ம துரை.. இயக்குகிறார் சீனு ராமசாமி!

விஜய் சேதுபதி நடிக்கும் தர்ம துரை.. இயக்குகிறார் சீனு ராமசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சலீம் வெற்றித் திரைப்படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஆர்கே சுரேஷ் தயாரிக்கும் தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதை நேற்றே சொல்லியிருந்தோம்.

இடம் பொருள் ஏவல் படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு- சுகுமார், இசை- யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்- காசி விஸ்வநாதன், கலை- பத்மாமகன்.

Seenu Ramasamy's third directorial with Vijay Sethupathy

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

விஜய் சேதுபதியை வைத்து ஏற்கெனவே சீனு ராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த சூழலில் தனக்கு வாழ்வு தந்த சீனு ராமசாமிக்கு உதவ இந்த தர்ம துரையில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

நல்ல கலைஞர்கள்... நல்லபடி வரவேண்டும். அதற்கு ரஜினியின் இந்தத் தலைப்பு உதவட்டும்!

English summary
Seenu Ramasamy is going to direct actor Vijay Sethupathy in Darma Durai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil