»   »  ஆதிவாசியும், அதிசய பேசியும்!

ஆதிவாசியும், அதிசய பேசியும்!

Subscribe to Oneindia Tamil
Senthil

நகைச்சுவை குறு மன்னன் செந்தில் முதல் முறையாக நாயகனாக அவதாரம் எடுக்கிறார். ஆப்பிரிக்க ஆதிவாசி வேடத்தில் அவர் நடிக்க, ஆதிவாசியும், அதிசய பேசியும் என்ற பெயரில் புதிய படம் உருவாகவுள்ளது.

'தி காட்ஸ் மஸ்ட் பி கிரேசி' என்ற படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மிகப் பிரபலமான தென்னாப்பிரிக்கப் படமான அது ஆப்பிரிக்க பழங்குடியினரைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படமும் கூட.

இப்போது அதே டைப்பிலான படம் ஒன்று உருவாகவுள்ளது தமிழில். மாலன் என்ற புதிய இயக்குநர் இந்தப் படத்தை செந்திலை வைத்து இயக்கவுள்ளார். ஆதிவாசியும், அதிசயபேசியும் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிபிசி இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

80 களிலும், 90களின் ஒரு பாதியிலும் கவுண்டமணியோடு சேர்ந்து நகைச்சுவையில் கலக்கியவர் செந்தில். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் ஆகின. வடிவேலுவின் வருகைக்கு முன்பு வரை இந்த ஜோடியின் காமெடிதான் கலக்கி வந்தது.

இந்த நிலையில் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு செந்தில் நாயகனாகியுள்ளார். தனக்குப் பின்னால் நடிக்க வந்து ஹீரோவாகவும் கலக்கி விட்ட வடிவேலுவின் பாணியில் முழு நீள ஹீரோவாக இப்படத்தில் நடிக்கவுள்ளார் செந்தில்.

ஒரு பழங்குடி நபரின் கையில் செல்போன் சிக்கி விடுகிறது. அதை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு, படுத்தும் பாட்டை விளக்குவதே இந்தப் படத்தின் கதை என்கிறார் மாலன்.

காமெடி இளவரசர்கள் மயில்சாமி, வையாபுரி, ரமேஷ் கண்ணா ஆகியோரும் படத்தில் இருப்பதால் வயிறு முட்ட சிரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சக்ரி என்பவர் இசையமைக்கிறார். காசிவிஸ்வநாதன் கேமராவைக் கையாளுகிறார். மலேசியா மற்றும் கடலோர ஆப்பிரிக்காவில் வைத்துப் படம் பிடிக்கவுள்ளனராம். டிசம்பர் 5ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

ஜிங்காலோ ஜிங்கல ஜிங்கா ஜிங்காலோ

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil