»   »  அப்பா ஷாருக்கான் மடியில் நின்று ஊலாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ஆப்ராம்

அப்பா ஷாருக்கான் மடியில் நின்று ஊலாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ஆப்ராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் தனது தந்தையின் மடி மீது நின்று டர்ட்டி பிக்சர் படத்தில் வரும் ஊ லாலா ஊ லாலா பாடலுக்கு நடனம் ஆடினார்.

கடந்த சனிக்கிழமை மும்பையில் உள்ள ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியை காண கொல்கத்தா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் தனது 2 வயது மகன் ஆப்ராமுடன் வந்திருந்தார்.

அந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஆப்ராம்

ஆப்ராம்

போட்டியை காண ஷாருக்கானுடன் பாலிவுட் நடிகர் வருண் தவானும் வந்திருந்தார். ஆப்ராம் தனது தந்தையை போன்று வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். பார்வையாளர்களில் பலரின் கவனத்தையும் ஆப்ராம் ஈர்த்தார்.

டான்ஸ்

டான்ஸ்

ஆப்ராம் ஷாருக்கானின் மடியில் நின்று கொண்டு வித்யா பாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர் படத்தில் வரும் ஊ லாலா ஊ லாலா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அவர் ஆடிய டான்ஸை தான் பார்வையாளர்களில் பலரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா அணி தோல்வி அடைந்தபோதிலும் ஷாருக்கான் டென்ஷன் ஆகாமல் அமைதி காத்ததுடன் அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் பாய்ஸ் என்று தனது அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

வாக்குறுதி

கேகேஆர் அணியின் சார்பில் ஷாருக்கான் கொல்கத்தா மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அதாவது அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக விளையாடி பெருமை தேடித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

English summary
Bollywood actor Shah Rukh Khan's son Abram danced for Oolala song from the movie Dirty Picture on his dad's lap during IPL match.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil