பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பிறந்தநாள்.. 60 வயதில் 10,000 கோடிக்கு அதிபதி..மிரள வைக்கும் சொத்து மதிப்பு

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கான் இளம் ஹீரோக்களைவிட வசூலில் முன்னணியில் இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான், அதற்கு முன்னதாக நடித்த பதான் உள்ளிட்ட படங்கள் எல்லாம் அசால்ட்டாக 1000 கோடி ரூபாயை வசூலித்தன. அதனைப் பார்த்து பிரமித்தார்கள். அப்படிப்பட்ட ஷாருக் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு மிரள வைக்கிறது.

ஷாருக்கான் உலக அளவில் ஃபேமஸ் ஆனவர். அவர் கரியரை ஆரம்பித்தபோது படாத கஷ்டம் இல்லை. ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்த அவர் எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் திறமையையும், உழைப்பையும் வென்று காண்பித்தவர். இப்போதை பாலிவுட் ஹீரோக்களுக்கு போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கும் அவர் இன்னும் நிறைய தூரம் ஓடுவார் என்றே தெரிகிறது.

கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்: இந்திய அளவில் அவருக்கு கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் இருக்கிறது. பிறந்தநாள் மட்டுமின்றி வார நாட்களில்கூட அவரை பார்ப்பதற்கு வீட்டுக்கு முன்பு பல ரசிகர்கள் கூடுவார்கள். அந்த அளவுக்கு தினமும் அவர் எல்லோரிடமும் தாக்கத்தை ஏற்படுத்திவருவது ஆச்சரியமான ஒன்றாகவே பலரால் கருதப்படுகிறது. 1992ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த அவார் 33 வருடங்களாக எனர்ஜி குறையாமல் இருக்கிறார்.

Shah Rukh Khan Birthday Here are details about His Net worth King Khan Turns 60 With 12 490 Crore
Photo Credit:

1000 கோடி வசூல்: பாலிவுட் இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கே திணறும் சூழலில் ஷாருக் நடித்த படங்கள் வரிசையாக 1000 கோடி ரூபாயை அள்ளுகின்றன. அதிலும் அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் சென்சேஷனல் ஆனது. அதேசமயம் அட்லீயின் இயக்கத்தை தென்னிந்தியாவில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தது நினைவுகூரத்தக்கது. அதையெல்லாம் தாண்டி வசூலில் சக்கைப்போடு போட்டதென்றால் அதற்கு ஒரே காரணம் ஷாருக்கான் மட்டுமே.

60ஆவது பிறந்தநாள்: அவரது நடிப்பில் அடுத்ததாக கிங் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதுவும் மாஸ் காண்பிக்கும் என்று அவரது ரசிகர்கள் அடித்து கூறுகிறார்கள். இந்நிலையில் ஷாருக் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பலர் வாழ்த்து கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

10,000 கோடி ரூபாய்: அவரிடம் மொத்தம் 12,490 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. திரைப்பட துறையை பொறுத்தவரை ரெட் சில்லிஸ் என்ட்டெர்டெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். அதுதான் ஜவான் படத்தை தயாரித்தது. இதுதவிர்த்து குழந்தைகளுக்காக Kidzania என்ற தீம் பார்க்கை ஒன்றையும் நடத்திவருகிறார். அதன் மதிப்பு மட்டுமே 200 கோடி ரூபாய் என்று அறியப்படுகிறது. இதன் ஒரு டிக்கெட் விலை அதிகபட்சம் 1800 ரூபாயாக இருக்கிறது. இவை தவிர்த்து ஏகப்பட்ட தொழில்களை அவர் செய்துவருகிறார். அதிலும் வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. ஒரு படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் எனவும் பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X