»   »  மகனுக்காக 'இந்த' படத்தை 5 நாட்களில் 13 முறை பார்த்த ஷாருக்கான்

மகனுக்காக 'இந்த' படத்தை 5 நாட்களில் 13 முறை பார்த்த ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது இளைய மகன் ஆப்ராமுக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஃபைன்டிங் நீமோ என்ற படத்தை 5 நாட்களில் 13 முறை பார்த்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன், மகள் சுஹானா ஆகியோர் லண்டனில் படித்து வருகிறார்கள். மும்பை வீட்டில் ஷாருக்கான், கௌரியுடன் இளைய மகன் ஆப்ராம் கான்(3) மட்டுமே உள்ளார்.

ஷாருக்கானும், கௌரியும் அடிக்கடி லண்டன் சென்று ஆர்யன், சுஹானாவை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது பற்றி ஷாருக்கான் கூறுகையில்,

Shah Rukh Khan has watched this movie 13 times in five days

என்னை பொறுத்த வரை குழந்தைகளுடன் ஜாலியாக இருப்பது என்றால் சோபாவில் அமர்ந்து சிப்ஸ், கோலா சாப்பிட்டு டிவி பார்ப்பது. கடந்த 5 நாட்களில் மட்டும் நான் ஃபைன்டிங் நீமோ படத்தை 13 முறை பார்த்துவிட்டேன். எல்லாம் ஆப்ராமுக்காக தான் என்றார்.

ஷாருக்கான் ராகுல் தோலாகியாவின் ரயீஸ் படத்தில் நடித்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகும்.

English summary
Bollywood actor Shahrukh Khan has watched the movie Finding Nemo 13 times in five days for his son Abram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil