»   »  ஃபேன் படத்திற்க்காக எனக்கு விருது கொடுக்கல, அழுதுடுவேன்: ஷாருக்கான்

ஃபேன் படத்திற்க்காக எனக்கு விருது கொடுக்கல, அழுதுடுவேன்: ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஃபேன் படத்திற்கு எனக்கு விருது கிடைக்காவிட்டால் அழுதுவிடுவேன் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக்கான் நடித்த ஃபேன் படம் கடந்த 15ம் தேதி ரிலீஸானது. படத்தை ஷாருக்கானின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ஷாருக்கான் படத்தை தன் தோளில் தாங்குவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வசூல்

வசூல்

ஃபேன் படம் ரிலீஸான 5 நாட்களில் ரூ.64 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக் நடிப்பில் வெளியான தில்வாலே படம் ரிலீஸான முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஃபேன் படத்தில் ஷாருக்கான் அருமையாக நடித்துள்ளார் என்று ஆளாளுக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து ஷாருக் கூறுகையில், ஃபேனுக்காக எனக்கு

விருது அளிக்க வேண்டும். இல்லை விருதை பறித்துக் கொள்வேன் அல்லது அழத் துவங்கிவிடுவேன் என்றார்.

அப்பா

அப்பா

படத்தை பார்த்தை ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் குஷியாகிவிட்டாராம். காரணம் படத்தில் இரண்டு ஷாருக்கான். இரண்டு பேரையும் பார்த்துவிட்டு அய், இரண்டு அப்பா என்று துள்ளிக் குதித்தாராம் ஆப்ராம்.

ரயீஸ்

ரயீஸ்

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு மற்றும் ஒரு படம் ரிலீஸாக உள்ளது. அது தான் ரயீஸ். இந்த ஆண்டு சல்மான் கான், ஆமீர் கான், அக்ஷய் குமார் ஆகியோரின் படங்களும் ரிலீஸாக உள்ளன. அதனால் ஷாருக்கானுக்கு விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Bollywood actor Shahrukh Khan said that if he doesn't get an award for his latest release Fan, he will start crying.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil