»   »  கெளரி-ஷக்தியின் பூ மலரும் ரெடி

கெளரி-ஷக்தியின் பூ மலரும் ரெடி

Subscribe to Oneindia Tamil

அப்பா பி.வாசுவின் இயக்கத்தில் சின்னத்தம்பி படத்தில் சின்ன பிரபுவாக நடித்த மாஸ்டர் ஷக்தி இப்போ வளர்ந்து பெரிய மனுஷன் ஆகிவிட்டார்.

இப்போது ஷக்தியாக தொட்டால் பூ மலரும் படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துவிட்டார். மகனின் படத்துக்கு பிரமாண்டமாக பூஜை போட்டு லாஞ்ச் செய்த வாசு தான் படத்தையும் இயக்கினார்.

அப்பா இயக்குவதால் மகனுக்கு வசதிகள் பல இருந்தாலும் சங்கடங்களும் நிறையவே. அந்த வகையில் ஹீேராயினுடன் கட்டி உருளும்போது ரொம்ப சங்கேஜப்பட்டுவிட்டாராம் ஷக்தி.

ஷக்தி கூறுகையில், நடிக்கும்போது அப்பா-மகன் எல்லாம் இல்லை. அவர் டைரக்டர், நான் புதுமுக நடிகன். இதனால் அப்பாவிடம் சூட்டிங் ஸ்பாட்டில் வாங்காத திட்டே இல்லை.

ஒரு சீனில் ஹீரோயின் கெளரி முன்ஜாலை நெருக்கமாகக் கட்டி பிடிக்கணும். ஷூட்டிங்கிற்கு முன்பாக போட்டோ செஷனிலேயே கெளரியை கட்டி பிடிக்க அப்பா சொன்னபோதே பயந்து நடுங்கி விட்டேன்(எதுக்கு).

நான் இதற்கு முன்னாடி கோ-எஜூகேசன் ஸ்கூலில் கூட படித்தது இல்லை. பெண்களிடம் ப்ரீயாக பேசிப் பழகும் டைப்பும் இல்லை. (என்னப்பா ஒரு பொண்ண கட்டிப் பிடிக்க கோ-எஜூகேசன்ல படிக்கணுமா)

ஆனாலும் கஷ்டப்பட்டு தான் போட்டே செஷன் செய்தோம். அடுத்து சூட்டிங் ஸ்பாட்டிலும் இதே பிரச்சனை. கெளரியை தொடவே பயம். ஆனால், எல்லாம் கொஞ்சநாள் ஆனதும் சரியாகி விட்டது. இதோ இப்போது படத்தின் சூட்டிங்கே முடிந்து விட்டது என்கிறார் ஷக்தி.

படத்தின் பிரிவியூ ஷோவை சமீபத்தில் ரஜினி, கமலை அழைத்துப் போட்டுக் காட்டினார் வாசு. படத்தைப் பார்த்த ரஜினி, பார்க்க குழந்தை மாதிரி இருக்கே, உன்னிடம் இவ்வளவு திறமையா என்று பாராட்டினார். அதுவே விருது கிடைச்ச மாதிரி இருந்தது என்று மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் ஷக்தி.

தொட்டால் பூ மலரும் படம் ஆகஸ்ட் 3ம் தேதி ரிலீசாம். பார்ப்போம் ஷக்தியின் பயம் உண்மையானதா..இல்லை அப்பாவுக்காக தம்பி காட்டிய பயமா என்று.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil