2 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?.. பெண் குழந்தையின் நிலை என்ன?.. மனைவியை பிரிந்தாரா ஷர்வானந்த்?
ஹைதராபாத்: எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் ஷர்வானந்த் குறித்து தெலுங்குத் திரையுலகில் தற்போது ஒரு பரபரப்பான வதந்தி பரவி வருகிறது.
நடிகர் ஷர்வானந்த் மற்றும் அவரது மனைவி ரக்ஷிதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பேசப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி தற்போது பிரிந்து வாழ்வதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

நாக சைதன்யா - சமந்தாவின் விவாகரத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மீண்டும் ஒரு டோலிவுட் ஹீரோவின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
2 வருட திருமண வாழ்க்கை: மென்பொருள் நிபுணரான ரக்ஷிதாவை ஷர்வானந்த் இரு வருடங்களுக்கு முன்புதான் மணந்தார். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தக் காதல் ஜோடியை ரசிகர்கள் முன்மாதிரியாகப் போற்றினர். இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெண் குழந்தையின் நிலை என்னவாகும்?: இருவரும் "பரஸ்பர ஒப்புதலுடன்" பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும், அவசரமாக விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களது மகள் சில நாட்கள் தந்தையுடனும், சில நாட்கள் தாயுடனும் மாறி மாறி வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அமைதி காக்கும் ஷர்வானந்த்: சமூக வலைத்தளங்களில் இந்த விவாதம் தீவிரமடைந்துள்ள போதிலும், உண்மை நிலவரம் என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. தற்போது வரை ஷர்வானந்த் இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்து வருகிறார். அவரது தரப்பில் இருந்து ஒரு தெளிவான அறிக்கை வெளியானால் இந்த வதந்திகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்வானந்தின் திரைவாழ்க்கையைப் பொறுத்தவரை, கடைசியாக 2022-ஆம் ஆண்டு வெளியான 'ஓகே ஒக்க ஜீவிதம்' படத்திலும், அதைத் தொடர்ந்து 'மனமே' படத்திலும் நடித்தார். தனது அடுத்த படம் 'போகி' என்று அறிவித்திருந்தாலும், படப்பிடிப்பு குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
ரசிகர்கள் கோரிக்கை: காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஷர்வானந்த் பெண் குழந்தையையும் பெற்றெடுத்த நிலையில், மனைவியை பிரிவது சரியான ஒன்றாக இருக்காது என்றும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் பேசி தீர்த்துக் கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











