»   »  சிவகார்த்திகேயன் இப்படி பொசுக்கு பொசுக்குன்னு அழ 'இவர்' தான் காரணம்

சிவகார்த்திகேயன் இப்படி பொசுக்கு பொசுக்குன்னு அழ 'இவர்' தான் காரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வளவு இமோஷனலாக இருப்பதற்கு அவரது அம்மா தான் காரணமாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாண்டே சிவகார்த்திகேயனிடம் பல கேள்விகள் கேட்டார்.

அதன் விபரம் வருமாறு,

அம்மா பிள்ளை

அம்மா பிள்ளை

அப்பா ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் அவர் செய்பவற்றை நாம் செய்ய முடியாது. சில சமயம் பிரமிப்பாக இருக்கும், சில சமயம் பயமாக இருக்கும். அதனால் அம்மா பிள்ளையாகவே வளர்ந்துவிட்டேன்.

பிரச்சனை

பிரச்சனை

பிரச்சனை, சண்டைக்கு போகக் கூடாது. ஜாலியாக இருக்க வேண்டும். ரெமோ படத்திற்கு பாட்டு எழுதிய விவேக்கும் நானும் திருச்சியில் ஒரே வகுப்பில் படித்தது தற்போது தான் தெரியும். அந்த லெவல் தான் ஸ்கூலில்.

அப்பா

அப்பா

அப்பா பெரிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறு குழந்தை வந்தால் கூட எழுந்து நின்று கைகொடுப்பார். அது மனதில் பதிந்துவிட்டது.

அம்மா

அம்மா

அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்பதை அம்மாவிடம் கற்றுக்கொண்டேன். நான் இவ்வளவு இமோஷனலாக இருப்பதற்கும் அம்மா தான் காரணம்.

சிகரெட், மது

சிகரெட், மது

அப்பாவுக்கு சிகரெட், மது பழக்கம் இல்லை. நான் ரஜினி சார் ஃபேன். எனக்கு ரஜினி சார் என்றால் அம்மா என்றழைக்காத பாட்டு தான். என் கல்லூரி நண்பர்களுடன் தான் இன்னும் டச்சில் உள்ளேன். எங்க செட்டுக்கே மது, சிகரெட் பழக்கம் இல்லை. நாங்க அதிகபட்சமாக சினிமாவுக்கு செல்வோம் அதுவும் அம்மாவிடம் சொல்லிவிட்டே செல்வோம்.

படங்கள்

படங்கள்

எனக்கு காமெடி தான் பேஸ். ஆனால் அனைத்து படத்திலும் அதையே செய்ய முடியாது. ரெமோவுக்கு பிறகு இப்படி ஒரு காதல் படத்தில் நடிக்க முடியுமா என தெரியவில்லை.

வேண்டாம்

வேண்டாம்

சில படங்கள் 100 சதவீதம் வெற்றி பெறும் என தெரிந்தும் அவற்றை தவிர்த்துள்ளேன். ஏனென்றால் அதில் நடித்தால் பிறகு அதே போன்று கதைகள் மட்டுமே வரும். மோகன்ராஜா சார் படத்தில் சீரியஸாக நடிக்கிறேன். முதல்முதலாக இப்படி நடிக்கிறேன்.

திரைத்துறை

திரைத்துறை

திரைத்துறையை புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு வாய்ப்பு தரும் நல் உள்ளங்களும் உண்டு, அதை தட்டிச் செல்பவர்களும் உண்டு. சினிமாவில் பெரிய பணமும், தொடர் வெற்றியும் பிரச்சனை தான்.

English summary
Actor Sivakarthikeyan is emotional type who cries very soon. His mother is the reason behind him being emotional.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil