»   »  சிவாஜி ஆடியோ பரபரப்பு விற்பனை

சிவாஜி ஆடியோ பரபரப்பு விற்பனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்ளாக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட பாடல்கள் இன்று சென்னையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

தமிழ் திரையுலக வரலாற்றிலேேய மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் சிவாஜி. ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஷ்ரியா உள்ளிட்ேடார் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கியுள்ளார்.

சிவாஜி படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால், படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தன. உச்சகட்டமாக சமீபத்தில் 3 பாடல்கள் லீக் ஆனது. 2 நாட்கலளுக்கு முன்பு மொத்தப் பாட்டும் இன்டர்ெநட்டில் வெளியாகி விட்டது.

இந்த நிலையில் இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த எளிய நிகழ்ச்சியில் சிவாஜி பட பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாக விழா நடந்தது.

பாடல் வெளியீட்டை சாதாரணமாக நடத்தியற்கு ஒரு காரணம் கிசுகிசுக்கப்பட்டது. அதாவது 2005ம் ஆண்டு சந்திரமுகி வெளியானபோது, கன்னிமாரா ஹோட்டலில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர்களுக்கும், ரஜினியின் மனைவி லதாவுக்கும் ஏற்பட்டு விட்ட சில கசப்பான அனுபவங்களால் இதுேபான்ற விழாக்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் ரஜினி.

சிவாஜி பட பூஜை கூட படு ரகசியமாக, எளிமையாகத்தான் நடந்தது. பூஜைக்கு பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை. பூஜை படத்தை பி.ஆர்.ஓ. மூலமாகத்தான் பத்திரிக்கைகளுக்கு வழங்கினார்கள்.

அதேபோலத்தான் இன்றும், சிவாஜி பட பாடல் கேசட் மற்றும் சிடிக்கள், பட ஸ்டில்கள் அடங்கிய சிடிக்களும் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று மாலையே சிடிக்களும், கேசட்டுகளும் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இன்று காலை முதல் அவை விற்பனைக்கு வந்து விட்டன. கேசட் வாங்க கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது.

பல இடங்களில் ரஜினி மன்றத்தினர், குழாய் ஒலிபெருக்கிகள், பாக்ஸ் ஒலிபெருக்கிகள் மூலம் சிவாஜி பாட்டை ஒலிக்க விட்டு ரவுசு பண்ணிக் கொண்டுள்ளனர்.

கேசட் விற்பனை படு சூடாக உள்ளதாம். முன்னணி கேசட் விற்பனையாளரான மியூசிக் வேர்ல்டு நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில், நான்கு மணி நேரத்திற்குல் 3100 சிடிக்கள் விற்றுப் போய் விட்டதாக கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வாலி, வைரமுத்து, பா.விஜய், நா.முத்துக்குமார் ஆகிேயார் பாடல்களை எழுதியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உதித் நாராயண், விஜய் ஏசுதாஸ், சுரேஷ் பீட்டர்ஸ், மதுஸ்ரீ, தன்வி, சின்மயி, சயனோரா, கோமதிஸ்ரீ ஆகிேயார் பாடியுள்ளனர்.

ஒரு ஒரிஜினல் சிடியின் விலை ரூ. 100 ஆக வைக்கப்பட்டுள்ளது. ஆடிேயா கேசட்டின் விலை ரூ. 45 ஆகும். சிடி வாங்குவோருக்கு கூடவே 3 ரஜினி ஸ்ட்டிகர்களை இலவசமாக வழங்குகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil