»   »  சிவாஜி டிரைலர் வருதப்போய்!

சிவாஜி டிரைலர் வருதப்போய்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட டிரைலர் மே 31ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களிலும், டிவி சானல்களிலும் ஆர்ப்பரிக்க வருகிறது.

ஜூன் 15ம் தேதி சிவாஜி ரிலீஸாகும் என ஏவி.எம். நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் மாற்றம் இருக்கும், படம் திரையிடுவது தள்ளிப் போகும் என்று இடையில் பேச்சு கிளம்பியது. ஆனால் அதை புறம் தள்ளிய தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், திட்டமிட்டபடி படம் ஜூன் 15ம் தேதிக்கு படம் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.

சிவாஜி பட விற்பனை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். அனைத்து ஏரியாக்கும் விற்று விட்டனவாம். விரைவில் எந்தெதந்த தியேட்டர்களில் படம் வெளியாகிறது என்பதை தெரிவிக்கவுள்ளனராம்.

இப்போது படத்தின் டிரைலர் ரெடியாகி விட்டதாம். மே 31ம் தேதி முதல் தியேட்டர்களிலும் டிவி சானல்களிலும் டிரைலர் திரையிடப்படவுள்ளதாம்.

இதற்கிடையே கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்த இயக்குநர் ஷங்கர் சென்னை திரும்பி விட்டார். வந்ததும், வராததமுமாக ஏவி.எம். நிறுவனத்துக்குச் சென்ற அவர் கேன்ஸிலிருந்து சொன்ன சில மாற்றங்களை தனது உதவியாளர்கள் சரியாகச் செய்திருக்கிறார்களா என்பதை செக் செய்தாராம். தற்போது படம் பக்காவாக ரிலீஸுக்குத் தயாராக உள்ளதாம்.

சிவாஜி கவுண்ட் டவுண் 31ம் தேதி முதல் ஸ்டார்ட் ஆகப் போகிறது, பாஸை ஃபேஸ் பண்ண ரெடியாகிக்கோங்கோ!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil