சூப்பர் டீலக்ஸ்: என்ன விஜய் சேதுபதி, இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டீர்களே?
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

சூப்பர் டீலக்ஸ்
சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதியின் படம் என்றே விளம்பரம் செய்யப்படுகிறது. அனைத்து போஸ்டர்கள், ப்ரொமோ வீடியோக்களிலும் அவர் உள்ளார்.
இந்நிலையில் படம் குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷில்பா
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி வெறும் 38 நிமிடங்கள் தான் வருவாராம். விஜய் சேதுபதி கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் சூப்பர் டீலக்ஸ் படம் அவர் பெயரை வைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. விஜய் சேதுபதியை படம் முழுக்க பார்க்கலாம் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் பேரதிர்ச்சி அளிக்கும் தகவல்.

உண்மை
முன்னதாக சீதக்காதி படமும் விஜய் சேதுபதி படம் என்றே விளம்பரம் செய்யப்பட்டது. அந்த படத்தில் விஜய் சேதுபதி 40 நிமிடம் மட்டுமே வந்தார். படம் ரிலீஸாவதற்கு முன்பே தான் கவுரவத் தோற்றத்தில் நடித்த உண்மையை கூறி ரசிகர்களை தியேட்டர்களுக்கு அழைத்தார்.

அமைதி
விஜய் சேதுபதி சீதக்காதி பற்றிய உண்மையை சொல்லி அழைத்தும் படம் ஓடவில்லை. அதனால் தான் சூப்பர் டீலக்ஸ் பற்றிய உண்மையை சொல்லாமல் இருக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











