»   »  ஷ்ரியாவுடன் இணையும் அஜீத்

ஷ்ரியாவுடன் இணையும் அஜீத்

Subscribe to Oneindia Tamil

பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார்.

கிரீடம் படத்தை முடித்து விட்ட அஜீத், அடுத்து பில்லா ரீமேக்கில் நடித்து வருகிறார். பில்லாவுக்குப் பிறகு நடிக்கவுள்ள படம் குறித்தும் அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்தார்.அதில் ஒரு கதையை முடிவு செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஆனால் நாயகி முடிவாகி விட்டாராம். அதாவது அஜீத்தே ஹீரோயினை பிக்ஸ் செய்து விட்டார். அது ஷ்ரியா என்கிறார்கள். ரஜினியுடன் சிவாஜியி்ல நடித்ததால் பிரபலமாகி விட்ட ஷ்ரியாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் நடித்து வரும் ஷ்ரியா, ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் இணைகிறார்.இதையடுத்து விக்ரமுடன் கந்தசாமி படத்திலும் நடிக்கவுள்ளார். அந்த வரிசையில் அடுத்து அஜீத்துடனும் ஜோடி போடப் போகிறார்.

சமீபத்தில் இந்தியில் ஷ்ரியா நடித்த படம் வருகிற 29ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறதாம்.

அடடா, அடிச்சா இப்படி அடிக்கணும்லே அதிர்ஷ்டக் காற்று!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil