»   »  முடியாதுன்னா முடியாது: இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் 'அந்த' காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ்

முடியாதுன்னா முடியாது: இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் 'அந்த' காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யா படத்தில் லிப் டூ லிப் காட்சயில் நடிக்க மறுத்துவிட்டாராம் சிபிராஜ்.

சிபிராஜ் நடித்து வரும் படம் சத்யா. விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

உலக நாயகன் கமல் ஹாஸனிடம் அனுமதி கேட்ட பிறகே படத்திற்கு சத்யா என பெயர் வைத்துள்ளார்கள்.

லிப் டூ லிப்

லிப் டூ லிப்

சத்யா படத்தில் சிபிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். கதைப்படி சிபி ரம்யாவுக்கு லிப் டூ லிப் கொடுக்க வேண்டுமாம். இந்த காட்சி குறித்து இயக்குனர் சிபியிடம் பேசியுள்ளார்.

முடியாது

முடியாது

நான் லிப் டூ லிப் காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று சிபிராஜ் கறாராக கூறிவிட்டாராம். இல்ல சார், படத்திற்கு இந்த காட்சி மிகவும் முக்கியம் என்று இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் முடியே முடியாது என்று சிபி தெரிவித்தாராம்.

மகன்

மகன்

தான் லிப் டூ லிப் காட்சியில் நடித்து அதை தன் மகன் படத்தில் பார்த்தால் நன்றாக இருக்காது என்று நினைக்கிறாராம் சிபி. தன்னை ரோல் மாடலாக பார்த்து வளரும் மகனுக்கு முன்பு இவ்வாறு நடிக்க விரும்பவில்லையாம்.

கதை

கதை

காணாமல் போகும் குழந்தையை கண்டுபிடிப்பதை த்ரில் கலந்து சொல்லும் படம் சத்யா. இது ஒரு கமர்ஷியல் படமாக அமையும் என்று இயக்குனர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்.

English summary
Sibiraj has refused to act in a lip lock scene for his upcoming movie Sathya being directed by Pradeep Krishnamurthy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil