»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஜோர் பட வெற்றிக் கூட்டணியான சத்யராஜூம் அவரது மகன் சிபிராஜும் மீண்டும் இணைகின்றனர்.

இப்போது தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோ யார் என்றால் அது விக்ரமோ, சூர்யாவோ, தனுஷோ அல்ல;சத்யராஜ்தான். அழகசேன், சுயேட்சை எம்.எல்.ஏ, மகா நடிகன், படவா மற்றும் பெயர் சூட்டப்படாத ஒரு படம் எனமனுஷர் அநியாயத்துக்கு பிஸி.

சீப் ரேட், சொதப்பாத கால்ஷீட், ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீ மாதிரி கூடவே சிபிராஜுன் கால்ஷீட், போட்டமுதலுக்கு மினிமம் கியாரண்டியும் நிச்சயம். இதனால் சத்யராஜ் மகா பிஸியாகிவிட்டார்.

சிபிராஜ் மட்டும் நடித்த படங்கள் ஏதும் ஓடாத நிலையில், இவரும் சிபியும் இணைந்து நடித்த ஜோர் படம்கணிசமான அளவு கல்லா கட்டி வினியோகஸ்தர்களைக் குளிர்வித்துள்ளது. வெற்றி பெற்ற குதிரை மீதுஅடுத்தடுத்து பந்தயம் கட்டுவது ரேஸில் மட்டுமல்ல, கோலிவுட்டிலும் படு பிரபலம்.

விடுவார்களா?. ஜோர் படத்தின் லொள்ளு கூட்டணியான சத்யராஜ், சிபிராஜ், வடிவேலு அப்படியே அடுத்தபடத்திலும் புக் ஆகிவிட்டது. இதை இயக்கப் போவது ஜோர் டைரக்டர் செல்வாதான். சத்யராஜை வைத்துஅழகேசன் படத்தை தயாரிக்கும் கிரேஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்தப் புதுப் படத்தையும் தயாரிக்கப்போகிறது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீனுக்கும் சத்யராஜ்- சிபிராஜ் கூட்டணியை வைத்து ஒரு படம் பண்ண ஆசை வந்துபடவா என்ற படத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த திடீர் மெளசு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று சத்யராஜிடம் கேட்டால், அவர் கேள்வியை மறந்துவிட்டுமகன் புராணம் பாட ஆரம்பித்து விட்டார்.

எனது ஆரம்ப காலப் படங்களான சட்டம் என் கையில், கண்ணன் ஒரு கைக்குழந்தை ஆகியவற்றில் நான்நடித்திருந்ததை விட, சிபி தனது முதல் படமான ஸ்டூடண்ட் நம்பர் ஒன்னில் நன்றாக நடித்திருந்தான்.

என்னை விட அவனுக்கு போராடும் குணம் அதிகம் உள்ளது. இது நிச்சயம் அவனை நல்ல நிலைக்குக் கொண்டுவரும். இப்போதுதான் அவன் போட்டியில் குதித்துள்ளான். கொஞசம் பொறுத்துப் பாருங்கள். அவன் கட்டாயம்ஜெயிப்பான் என்கிறார்.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தானே !


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil