»   »  இப்போ என்னை கூலிங்கிளாஸ் குணான்னுதான் கூப்பிடறாங்க! - சிபிராஜ்

இப்போ என்னை கூலிங்கிளாஸ் குணான்னுதான் கூப்பிடறாங்க! - சிபிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

போக்கிரி ராஜா படத்தில் நடித்த பிறகு என்னை அனைவரும் கூலிங்கிளாஸ் குணா என்றுதான் அழைக்கிறார்கள் என்று நடிகர் சிபிராஜ் கூறியுள்ளார்.

சமீபத்தில் போக்கிரி ராஜா திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் கூலிங் கிளாஸ் குணா என்ற பெயரில் வில்லனாக நடித்துள்ளார்.

Sibiraj is happy on Pokkiri Raaja result

இந்தப் படம் வெளியான பிறகு ரெஸ்டாரண்ட்கள், பார்லர்கள், காம்ப்ளக்ஸ்கள் என்று எங்கு சென்றாலும் சிபிராஜை கூலிங்கிளாஸ் குணா என்றே அழைக்கிறார்களாம்.

Sibiraj is happy on Pokkiri Raaja result

ரசிகர்கள் மற்றும் மக்களின் பட்டப்பெயரால் மகிழ்ச்சி அடைந்த சிபிராஜ் தொடர்ந்து எங்கு சென்றாலும் படத்தில் போட்டிருந்த அதே வித்தியாசமான கெட்டப்போடு சுற்றி வருகிறார். நாய்கள் ஜாக்கிரதையைத் தொடர்ந்து போக்கிரி ராஜா படத்திலும் தனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளதாகவும், இதே போன்று வித்தியாசமான கேரக்டர் மற்றும் கெட்டப்பில் நடிக்க சந்தர்ப்பம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறார் சிபிராஜ்.

English summary
Actor Sibiraj is happy about the outcome of Pokkiri Raaja and his character Cooling Glass Guna.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil