»   »  எங்கப்பாவை பேயாக பார்க்க ஆசையாக காத்திருக்கிறேன்: சிபிராஜ்

எங்கப்பாவை பேயாக பார்க்க ஆசையாக காத்திருக்கிறேன்: சிபிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் அப்பா சத்யராஜை பெரிய திரையில் பேயாக பார்க்க ஆசையாக காத்திருப்பதாக சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் பேய் படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கம் வேளையில் தான் ஜாக்சன் துரை படம் வெளியாக உள்ளது. தரணிதரன் இயக்கியுள்ள ஜாக்சன் துரை படத்தில் சிபிராஜ், பிந்து மாதவி, சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


படத்தின் இசை இந்த மாதம் வெளியிடப்படுகிறது, படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.


ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை

தற்போது பல திகில் படங்கள் ரிலீஸாகி வருகின்றன. ஆனால் அவற்றில் இருந்து வித்தியாசமான படமாக எங்களின் ஜாக்சன் துரை இருக்கும் என்று சிபிராஜ் தெரிவித்துள்ளார்.


காமெடி

காமெடி

நானும், கருணாகரனும் சேர்ந்து வரும் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளன. இது எனக்கு வித்தியாசமான படமாக அமையும் என்கிறார் சிபிராஜ்.


சத்யராஜ்

சத்யராஜ்

நான் என் தந்தை சத்யராஜுடன் சேர்ந்து ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளேன். அதனால் இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தது புதிதாக தெரியவில்லை என்று சிபி கூறியுள்ளார்.


பேய்

பேய்

என் தந்தை பேயாக நடித்துள்ளதை ரசித்துப் பார்த்தேன். அவர் தனது சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. அவரது கெட்டப்பும், நடிப்பும் ரசிக்கும்படியாக உள்ளது. அவரை பெரிய திரையில் பேயாக பார்க்க ஆவலாக உள்ளேன் என்று சிபிராஜ் தெரிவித்துள்ளார்.


English summary
Sibiraj told that he is eagerly waiting to see his father Sathyaraj as a ghost on big screen. Sathyaraj has acted as a ghost in the upcoming movie Jackson Durai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil