ஏமாற்றுபவர்கள் முன்னேற முடியாது...யாரை சொல்றாரு...வைரலாகும் சித்தார்த்தின் ட்வீட்

ஐதராபாத் : தமிழ், தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். இவர் நடித்துள்ள மகா சமுத்திரம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஷுட்டிங்கின் போது சித்தார்த்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட காயத்திற்காக சிறிய சர்ஜரி ஒன்று செய்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த சித்தார்த். சமீபத்தில் தான் ஐதராபாத் திரும்பினார். இதற்கிடையில் சித்தார்த் லண்டன் சென்றிருந்த போது மாகா சமுத்திரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் சித்தார்த்த கலந்து கொள்ளாததற்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

சித்தார்த்திற்கு காயம்

சித்தார்த்திற்கு காயம்

ஆனால் சித்தார்த், சர்ஜரிக்காக லண்டன் சென்றிருப்பதாகவும், விரைவில் அவர் திரும்பி விடுவார் என டைரக்டர், விழாவில் விளக்கம் அளித்தார். இந்நிலையில் லண்டனில் இருந்து திரும்பிய உடன் தனது உடல்நிலை குறித்து சித்தார்த்தே அப்டேட் வெளியிட்டார். அதில், மகா சமுத்திரம் படத்தில் சண்டை காட்சியில் நடித்த போது சிறிய காயம் ஏற்பட்டது. அதற்காக லண்டன் சென்று சர்ஜரி செய்தேன். தற்போது நலமுடன் இருக்கிறேன். அடுத்த சில மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

டப்பிங் வேலைகள்

டப்பிங் வேலைகள்

எனக்கு சிகிச்சை அளித்து நன்றாக கவனித்துக் கொண்ட டாக்டர்கள், என் மீது அன்பு கொண்ட ரசிகர்கள் என அனைவருக்கும் எனது நன்றி என குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் லண்டனில் இருந்து திரும்பிய கையோடு, மகா சமுத்திரம் படத்திற்காக டப்பிங் பேசி முடித்துள்ளார். இது தொடர்பான ஃபோட்டோக்களும் சமீபத்தில் இணையத்தில் வைரலாகின.

சமந்தாவின் விவாகரத்து

சமந்தாவின் விவாகரத்து

தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது சமந்தா - நாக சைதன்யா பிரிவை அறிவித்தது தான். ரசிகர்கள், உடன் பணியாற்றி நடிகர் - நடிகைகள் என பலரும் கவலையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி நடந்திருக்கக் கூடாது. இது துரதிஷ்டவசமானது என கூறி வருகின்றனர்.

சமந்தாவை சொல்கிறாரா சித்தார்த்

சமந்தாவை சொல்கிறாரா சித்தார்த்

இந்த சமயத்தில் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீட், வைரலாகி வருகிறது. அவர் தனது ட்வீட்டில், ஆசிரியர்களிடம் நான் கற்றுக் கொண்ட முதல் பாடம் ஏமாற்றியவர்கள் எப்போதும் முன்னேற மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதனால் பலரும் சித்தார்த்த யாரை சொல்கிறார் என குழம்பினர். ஆனால் ரசிகர்கள், முன்னாள் காதலியான சமந்தாவை தான் சித்தார்த் அப்படி கூறி உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னாள் காதலர்கள்

முன்னாள் காதலர்கள்

சமந்தாவும், சித்தார்த்தும் ஆரம்பத்தில் காதலித்து வந்தனர். இரண்டரை ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இவர்களின் காதல் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து, நாக சைதன்யாவுடன் பல படங்களில் இணைந்து நடித்த போது சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

விவாகரத்தில் முடிந்த காதல்

விவாகரத்தில் முடிந்த காதல்

குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2017 ல் கோவாவில் இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமீபத்தில் தனது சோஷியல் மீடியாக்களில் சமந்தா, தனது டிஸ்ப்ளே பெயரை மாற்றியதால் சமந்தா - நாகசைதன்யா இடையேயான பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து விவாகரத்து வதந்திகள் பரவியது. இவற்றிற்கு முடிவு கட்டும் விதமாக இரண்டு நாட்களுக்கு முன் தாங்களின் பிரிவை இருவரும் அறிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X