»   »  மார்ச் 30ம் தேதி திருமண அறிவிப்பை வெளியிடுவாரா சித்தார்த்?

மார்ச் 30ம் தேதி திருமண அறிவிப்பை வெளியிடுவாரா சித்தார்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற மறுநாளே தனது திருமணம் குறித்து அறிவிப்பதாக நடிகர் சித்தார்த் ஜோக்கடித்துள்ளார்.

சித்தார்த் தான் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று சித்தார்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனக்குள் ஒருவன் படத்திற்காக சித்தார்த் நிறைய ஹோம் ஒர்க் செய்து வித்தியாசமாக நடித்துள்ளாராம்.

இந்நிலையில் சித்தார்த்தின் திருமணம் பற்றி பேச்சு கிளம்பியது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

சித்தார்த் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்த்து அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

காதல் முறிவு

காதல் முறிவு

சித்தார்த்தும், சமந்தாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் சமந்தாவின் ஓவர் கவர்ச்சி காதலுக்கு வேட்டு வைத்துவிட்டது.

பிரிவு

பிரிவு

சமந்தா படங்களில் ஓவர் கவர்ச்சி காட்டி நடிப்பது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.

திருமணம்

திருமணம்

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் சித்தார்த். இரண்டு முறை காதல் முறிவு வேறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரிடம் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்று கேட்டதற்கு, இந்தியா உலகக் கோப்பையை வென்ற மறுநாளே என் திருமணம் பற்றி அறிவிக்கிறேன் என்று ஜோக்கடித்தார்.

மார்ச் 30

மார்ச் 30

மார்ச் 29ம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இம்முறையும் இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் டோணி அணி ரசிகர்கள் உள்ளனர். அப்படி என்றால் மார்ச் 30ம் தேதி திருமண அறிவிப்பை வெளியிடுவாரா சித்தார்த்?

English summary
Actor Siddharth told that he will announce about his wedding the day after India lifts the world cup.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil