twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு பிடித்த கதாநாயகி, ஜெனிலியா, நல்லா பழகுபவர் சமந்தா - சித்தார்த்

    By Shankar
    |

    சென்னை: எனக்குப் பிடித்த நாயகி ஜெனிலியா என்றும், நன்றாக பழகுபவர் சமந்தா என்றும் நடிகர் சித்தார் கூறியுள்ளார்.

    தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் சித்தார்த்.

    ரூ 10 கோடி வசூல்

    ரூ 10 கோடி வசூல்

    அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் நடித்து திரைக்கு வந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில், ரூ.10 கோடி வசூல் செய்து இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. பசியால் வாடியவனுக்கு வடை -பாயாசத்துடன் விருந்து கிடைத்தது போல இருக்கு, இந்த வெற்றி.

    ஜிகிர்தண்டா

    ஜிகிர்தண்டா

    அடுத்து கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில், ‘ஜிகிர்தண்டா' படத்தில் நடித்து வருகிறேன். வசந்தபாலன் டைரக்ஷனில், ‘காவிய தலைவன்' படத்தில் நடிக்க இருக்கிறேன். மேலும் 2 தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்.

    தீயா வேலை செய்யணும் குமாரு' படம், நல்ல திரைக்கதை. சுந்தர் சி, எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டார்.

    மீண்டும் சுந்தருடன்..

    மீண்டும் சுந்தருடன்..

    சுந்தர் சி. டைரக்ஷனில் மறுபடியும் நடிக்க ஆசைப்படுகிறேன். மீண்டும் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். இன்னும் தீயா வேலை செய்து சாதிக்க வேண்டும்.

    பிடித்த நடிகை

    பிடித்த நடிகை

    எனக்கு பிடித்த கதாநாயகி, என் முதல் படத்தில் நடித்த ஜெனிலியாதான். அவர், ஒரு நல்ல தோழி. அவருடைய கணவரும் எனக்கு நண்பர்தான்.

    சமந்தா எப்படி?

    சமந்தா எப்படி?

    என்னுடன் நடித்தவர்களில் ஹன்சிகாவை விட பழகுவதற்கு இனியவர் சமந்தா. ஏனென்றால், சமந்தா தமிழில் பேசுவார். ஹன்சிகா தமிழில் பேச மாட்டார்.

    திருமணம் எப்போ?

    திருமணம் எப்போ?

    என் திருமணம் பற்றி என்னிடம் ஒரு மூத்த நிருபர் கேட்டார். எனக்கு திருமணம் நடப்பதாக இருந்தால், என் அம்மா-அப்பாவிடம் சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் உங்களிடம் சொல்லி விடுகிறேன் என்று பதில் சொன்னேன். எனக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை. நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன்.

    எந்த கதாநாயகியை அடிக்கடி சந்திக்கிறீர்கள்?

    எந்த கதாநாயகியை அடிக்கடி சந்திக்கிறீர்கள்?

    எந்த கதாநாயகியையும் நான் அடிக்கடி சந்திப்பதில்லை. எல்லாம் படப்பிடிப்போடு சரி.

    புத்தர் பெயர் வைத்தும் கிசுகிசு ஏன்?

    புத்தர் பெயர் வைத்தும் கிசுகிசு ஏன்?

    புத்தருக்கு ஞானோதயம் வரும் முன்பு அவரும் ஜாலியாக இருந்தவர்தான். எனக்கு ஏன் சித்தார்த் என்று பெயர் வைத்தீர்கள்? என்றும், புத்தர் என்றே பெயர் வைத்து இருக்கலாமே என்றும் என் அம்மா-அப்பாவிடம் நான் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.

    எப்போது டைரக்டராவீர்கள்?

    எப்போது டைரக்டராவீர்கள்?

    அந்த எண்ணம் இருக்கிறது. டைரக்டர் ஆக வேண்டும் என்பது, ஒரு கனவு. அதை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் ஜாதகம் நன்றாக இருக்கும்போது நடித்து விட வேண்டும்.

    English summary
    Actor Sidhardh shared his exerience with his favourite actresses at TVSK press meet on Sunday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X