twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் மட்டுமில்ல சிம்புவுக்கும் கிடைத்தது...கோல்டன் விசா வழங்கி கெளரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

    |

    சென்னை : நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கிய 'மாநாடு' படம் வசுலை வாரி குவித்தது. 100 கோடி கிளப்பில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

    Recommended Video

    Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil

    இதனைத் தொடர்ந்து, தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "வெந்து தணிந்தது காடு" படத்திலும் நடித்து முடித்துள்ளார். சிம்பு நடிக்கும் படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்த 'மஹா' படம், ஜூலை 22ஆம் தேதி வெளியாகிறது.

    குடும்பப் பிணைப்பை சொல்லும் பச்சைக்கிளி தொடர்.. இன்னும் 3 நாள்ல துவக்கம்.. எந்த சேனல்ல தெரியுமா?குடும்பப் பிணைப்பை சொல்லும் பச்சைக்கிளி தொடர்.. இன்னும் 3 நாள்ல துவக்கம்.. எந்த சேனல்ல தெரியுமா?

    இதனைத் தொடர்ந்து, 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் செம குஷியாக காத்திருக்கிறார்கள்.

    பத்துதல ஷுட்டிங் எப்போ

    பத்துதல ஷுட்டிங் எப்போ

    தற்போது பத்துதல படத்தில் நடித்து வரும் சிம்பு, தனது தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனால் பத்துதல படத்தின் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜுலை மாத மத்தியில் தான் சிம்பு இந்தியா வர உள்ளாராம். இதனால் ஜுலை மாத இறுதியில் தான் பத்துதல ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாம்.

    புதிய லுக்கில் சிம்பு

    புதிய லுக்கில் சிம்பு

    அமெரிக்காவில் தனது தந்தையுடன் இருக்கும் போட்டோ ஒன்றை சிம்பு சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதில் பெரிய தாண்டியுடன் புதிய லுக்கில் உள்ளார் சிம்பு. இது பத்துதல படத்திற்கான தாதா லுக்கிற்காக வளர்க்கப்பட்ட தாடியாம். இந்த கேரக்டருக்காக தான் சிம்பு மீண்டும் லைட்டாக வெயிட் போட்டுள்ளாராம்.

    சிம்புவுக்கு கோல்டன் விசா

    சிம்புவுக்கு கோல்டன் விசா

    இந்த நிலையில், நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. சமீப காலமாகவே துபாய் அரசு இந்திய நடிகர் நடிகைகளை தேர்வு செய்து , தங்கள் நாட்டின் உயரிய விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி , பார்த்திபன் , த்ரிஷா , மம்முட்டி , மோகன் லால், துல்கர் சல்மான், மீனா, கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கியது. கடந்த வாரம் கமலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில் தற்போது சிம்புவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

     இதுக்கு தானா கோல்டன் விசா

    இதுக்கு தானா கோல்டன் விசா

    இதன் மூலம் துபாய் அரசு தங்கள் நாடுகளின் சுற்றுலா மேம்பாட்டை பெருக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கலை மற்றும் பொழுது போக்கினை மேம்படுத்தும் வகையில் துபாயில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பை வேண்டுகிறது அந்நாட்டு அரசு . கலை சேவைகளை நடிகர்கள் வழங்குவது, துபாய் சுற்றுலா தளங்கள் குறித்தான பதிவுகளை ஷேர் செய்வதன் மூலம் தங்கள் நாட்டின் புகழ் சாமானியர்களை சென்றடையும் என துபாய் அரசு நம்புகிறது.

    கோல்டன் விசாவை யார் பெறலாம்

    கோல்டன் விசாவை யார் பெறலாம்

    கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசால் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், கலை, அறிவியல், விளையாட்டுத் துறையில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படுகிறது. இந்த துறையில் திறமையானவர்கள் யாராக இருந்தாலும் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After Kamalhaasan now, UAE government honours Silambaran with golden visa. Ealier uae government announced gold visa for Simbu in the of February. Now he received from the UAE government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X