நீங்க இல்லாமல் நானில்லை.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் சிம்பு உருக்கம்!

சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் நடிகர் சிம்பு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வீடு திரும்பி விட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாநாடு படத்தின் வெற்றி, வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் என பிசியாகி இருந்த நடிகர் சிம்புவுக்கு திடீரென தீவிர காய்ச்சல் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு அந்த வைரல் ஃபீவரின் தாக்கம் ஏற்பட்டது.

வீடு திரும்பிய சிம்பு

வீடு திரும்பிய சிம்பு

காய்ச்சல் காரணமாக நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல் நிலை சற்றே தேறிய நிலையில், வீடு திரும்பி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீங்க இல்லாமல் நானில்லை

நீங்க இல்லாமல் நானில்லை

தான் சீக்கிரமே குணமாக வேண்டும் என பிரார்த்தனை பண்ண அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் பிரார்த்தனையால் தான் சீக்கிரம் குணமடைந்தேன் எனக் கூறிய சிம்பு #NeengailaamaNaanilla ஹாஷ்டேக்கையும் பதிவிட்டு நீங்க இல்லாமல் நானில்லை என உருகி உள்ளார்.

வைரல் ஃபீவர்

வைரல் ஃபீவர்

நடிகர் சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் பரவியதும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? என சந்தேகம் கிளம்பியது. ஆனால், சிம்புவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் வைரல் ஃபீவர் தான் என்றும் தகவல்கள் பரவின. இந்நிலையில், வீடு திரும்பி விட்டேன். வேகமாக குணமடைந்து வருகிறேன் என சிம்பு பதிவிட்டுள்ளார்.

படங்களில் பிசி

படங்களில் பிசி

இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாஸ்டர் மைண்ட் மூலம் உருவான மாநாடு நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கில் நடிக்கத் தொடங்கி உள்ளார் சிம்பு. மேலும், பத்து தல, மஹா, கொரோனா குமார் என கோலிவுட்டில் படு பிசியாக உள்ளார் சிம்பு.

Recommended Video

பிரச்சனைய நான் பாத்துக்குறேன்! என்ன நீங்க பாத்துக்கோங்க! | STR emotional Speech | Maanadu PreRelease
ரசிகர்கள் சந்தோஷம்

ரசிகர்கள் சந்தோஷம்

நடிகர் சிம்பு காய்ச்சல் குறைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளதை அறிந்து கொண்ட ரசிகர்கள் ரொம்பவே சந்தோஷம் அடைந்துள்ளனர். உடல் நலத்தை பார்த்துக்கோங்க அண்ணா, நீங்க தான் எங்களுக்கு முக்கியம் என ரசிகர்கள் சிம்புவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். சில ரசிகர்கள் கோயிலுக்கு சென்று சிம்பு குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று நிஜமாகவே பிரார்த்தனை செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X