கர்ணன் தனுஷை போல லுங்கிக்கு மாறிய சிம்பு; வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் லுக்!

சென்னை: நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் அட்டகாசமான செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத நபராக சிம்பு மாறி உள்ளார்.

ரெட் கார்டு பிரச்சனை சுமூக பேச்சுவார்த்தைகளால் முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. இந்நிலையில், செகண்ட் லுக்கை இயக்குநர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

ஷூட்டிங் தொடக்கம்

ஷூட்டிங் தொடக்கம்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் கிளம்பின.

ரெட் கார்டு நீக்கம்

ரெட் கார்டு நீக்கம்

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிம்பு மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அடிப்படையில் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இந்நிலையில், சுமூக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நடிகர் சிம்பு மீது இருந்த ரெட் கார்டு தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. அதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் ஃபெஃப்சி தொழிலாளர்கள் பிரச்சனையில்லாமல் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஓடாய் தேய்ந்த சிம்பு

ஓடாய் தேய்ந்த சிம்பு

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்த சிம்புவை அவரது உடல் எடையை வைத்து பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில், உடல் எடையை குறைத்து ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் சிம்பு. அதை விட ஒரு படி மேல் சென்று மேலும், உடல் எடை குறைப்பை நிகழ்த்திக் காட்டி சிம்புவா? இது? என ரசிகர்களை ஷாக்காக்கியது வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் லுக்.

டெரிஃபிக் சிம்பு

டெரிஃபிக் சிம்பு

இந்நிலையில், தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் லுக்கை இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சிம்புவை போல பிரில்லியன்ட் ஆன நடிகர் இருந்தாலும் எதுவும் சாத்தியமே என்றும் டெரிஃபிக் சிம்பு என்றும் அவருக்கு புகழாரம் சூட்டி இந்த செகண்ட் லுக் போஸ்டரை கெளதம் மேனன் வெளியிட்டு இருக்கிறார்.

Recommended Video

STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil
லுங்கி அணிந்து

லுங்கி அணிந்து

லுங்கி மற்றும் உள் பனியன் அணிந்து கொண்டு பல இளைஞர்களுடன் ஒரே வாடகை வீட்டில் தங்கி கனவுகளை தேடும் நாயகனாக சிம்பு இந்த படத்தில் நடிக்க உள்ளாரா? இல்லை அகதியாக நடிக்க உள்ளாரா? என ஏகப்பட்ட கேள்விகள் இந்த செகண்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கர்ணன் தனுஷ் போல

கர்ணன் தனுஷ் போல

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்திலும் நடிகர் தனுஷ் இதே போல லுங்கி மற்றும் உள் பனியன் உடன் தான் படம் முழுக்க நடித்திருந்தார். இந்நிலையில், கர்ணன் தனுஷா எனவும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே தனுஷ் போல சிம்பு ஒல்லியாக மாறி விட்டார் என்றும் ட்ரோல் செய்திருந்தனர்.

தேசிய விருது

தேசிய விருது

இந்த அளவுக்கு மெனக்கெட்டு உடல் எடையை குறைத்து நடிகர் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் கிடைப்பது உறுதி என்றும் ஏகப்பட்ட சிம்பு ரசிகர்கள் கெளதம் மேனன் வெளியிட்ட போஸ்டருக்கு கீழ் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

துருவ நட்சத்திரம் மாதிரி

துருவ நட்சத்திரம் மாதிரி

இந்த படத்தையாவது கரெக்ட்டா முடிச்சு ரிலீஸ் பண்ற வழிய பாருங்க கெளதம் மேனன் சார் விக்ரமின் துருவ நட்சத்திரம் மாதிரி பண்ணிடாதீங்க.. இப்போ தான் சிம்பு கரெக்ட் டைம்ல கம்பேக் கொடுத்திருக்காரு.. பார்த்து பண்ணுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுதான் கதை போல

இதுதான் கதை போல

வெளிநாட்டு வேலை வாழ்க்கையின் திரைப்படம் போல என சில ரசிகர்கள் செகண்ட் லுக்கை பார்த்தே படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டனர். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா வரிசையில் மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பார் கெளதம் மேனன் என்றும் வாழ்த்துகின்றனர் ரசிகர்கள்.

வேறமாறி மாறிட்டாரு

வேறமாறி மாறிட்டாரு

கெளதம் மேனன் படங்கள் என்றாலே செம ஸ்டைலிஷ் மற்றும் ரொமான்டிக்காகத் தான் இருக்கும். ஆனால், சிம்புவை வைத்து புதிதாக அவர் இயக்க உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்களை பார்த்த ரசிகர்கள் "வேறமாறி மாறிட்டாரு ஜிவிஎம்" என மீம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

போஸ்டர்லாம் நல்லா இருக்கு

போஸ்டர்லாம் நல்லா இருக்கு

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஃபிளாப் ஆனது, விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் பிரச்சனை, சமீபத்தில் வெளியான நவரசாவின் கிட்டார் கம்பி என தொடர்ந்து ஜிவிஎம் இயக்கும் படங்களால் திருப்தி அடையாத ரசிகர்கள் "போஸ்டர்லாம் நல்லா தான் விடுறீங்க ஆனா படம் தான்" என கமெண்ட் அடித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

டயலாக் தான் பயம்

டயலாக் தான் பயம்

டயலாக்க நினைச்சா தான் பயம் தலைவா.. மத்தபடி வாழ்த்துக்கள் என்றும் சில ரசிகர்களே ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தையாவது சூப்பர் ஹிட் படமாக பழைய கெளதம் மேனன் படமாக கொடுங்க என கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X