»   »  சிம்புவின் மன்மத லீலை

சிம்புவின் மன்மத லீலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனின் லீலாகரமான நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கே.பாலச்சந்தரின் மன்மத லீலை ரீமேக் ஆகிறது. அதே பாலச்சந்தரே ரீமேக் படத்தையும் இயக்குகிறார். இளைய மன்மதனாக சிம்பு நடிக்கவுள்ளார்.

பாலச்சந்தரின் முத்திரைப் படைப்புகளில் மன்மத லீலையும் ஒன்று. கமல்ஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டம் கிடைக்க உதவிய படங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.

சேலையைக் கண்டாலே போதும், மோகம் கொண்டு அவர்களை தனது மாய வலையில் சிக்க வைக்கும் காதல் நாயகனாக கமல்ஹாசன் அப்படத்தில் கலக்கியிருப்பார்.

படம் முழுக்க இளமைக் கொண்டாட்டமாக இருக்கும். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தை மீண்டும் பாலச்சந்தரே தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.

பொய் படத்துக்குப் பின்னர் பாலச்சந்தர் இயக்கவுள்ள படம் இது. மன்மத லீலையை மீண்டும் இயக்க பாலச்சந்தர் முடிவு செய்தவுடனேயே அவரது நினைவில் வந்தவர் ஜீவா. ஆனால் பிளேபாய் இமேஜுடன் கூடிய இந்த கேரக்டரில் நடிக்க ஜீவா தயங்கவே அந்த ஐடியாவை கைவிட்டார் பாலச்சந்தர்.

இதையடுத்து இந்த வேடத்தில் நடிக்க சிம்பு முன்வந்துள்ளாராம். காள படத்தை முடித்து விட்டு மன்மத லீலைக்கு வருவதாக கூறியுள்ளாராம் சிம்பு.

நான் அவனில்லை படத்தின் ரீமேக் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து பில்லா ரீமேக் ஆகிறது. ஜானியும் ரீமேக் ஆகவுள்ளது. கிட்டத்தட்ட 5 படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன. இந்த வரிசையில் 6வது படமாக மன்மத லீலையும் சேருகிறது.

ஏற்கனவே சிம்புவின் லீலைகளால் கோடம்பாக்கமே கலகலத்துக் கிடக்கிறது. இதில் மன்மத லீலையும் சேர்ந்துள்ளதால் சிம்புவின் இளமைத் துள்ளல் மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil