»   »  சீற வரும் காளை!

சீற வரும் காளை!

Subscribe to Oneindia Tamil

வல்லவன் சிம்புவின் காளை படம் முடிவுரும் தருவாயை நெருங்கியுள்ளது.

வல்லவன் படத்தை முடித்த பின்னர் கொஞ்சம் கேப் விட்ட சிம்பு, அடுத்து காளை படத்தில் இறங்கினார். சிம்புவே நேரடியாக தனது ஜோடி மற்றும் பிற கலைஞர்களைத் தேர்வு செய்தார்.

சிம்புவுக்கு ஜோடியாக வேதிகாவும், ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நாயகியாக நிலாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி வேடத்தில் நடித்து அசத்திய சங்கீதாவும் படத்தில் இருக்கிறார். பழைய ஹீரோயின் சீமாவுக்கு படத்தில் வில்லி வேடம்.

கடந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அனைத்துக் கலைஞர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இப்போது படம் முடியும் நிலைக்கு வந்துள்ளது.

அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளராக ஒரு காலத்தில் விளங்கிய நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். திமிரு பட இயக்குநர் தருண் கோபி படத்தை இயக்கியுள்ளார்.

காளை படத்தில் வேதிகாவும், நிலாவும் வியர்க்க விறுவிறுக்க கிளாமரில் கிளப்பியுள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஸ்டில்கள் இதை பறை சாற்றுவதாக உள்ளன.

படு சூடான போஸ்களைக் கொடுத்து வேதிகா அசத்தியுள்ளார். அர்ஜூனால் அறிமுகப்படுத்தப்பட்டு, முனி படத்தில் பிரேக் கொடுத்த வேதிகா, காளையில் முழு வீச்சில் கிளாமர் புயலைக் கிளப்பியுள்ளார்.

வேதிகாவின் ஸ்டில்கள் அனைத்தும் படு கிளாமராக உள்ளன. அதேபோல சிம்புவுடன் படு நெருக்கமாக போஸ் கொடுத்து பயமுறுத்தியுள்ளார் நிலா. வேதிகாவுக்கு நான் சற்றும் இளைத்தவள் இல்லை என்று சொல்வது போல உள்ளது நிலாவின் குளு குளு போஸ்கள்.

விரைவில் பாடல் காட்சிகளைப் படமாக்குவதற்காக சைபீரியாவுக்குப் பறக்கவிருக்கிறதாம் காளை யூனிட்.

சீறல் எப்படி இருக்குமோ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil