»   »  சிவாஜி.. பேச மறுத்த சிம்பு

சிவாஜி.. பேச மறுத்த சிம்பு

Subscribe to Oneindia Tamil

சிம்புவின் காளை படப்பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரஜினி நடித்த சிவாஜி படம் அங்குள்ள சுந்தரம் தியேட்டரில் திரையிடப்பட்டது.

சிம்பு, இயக்குனர், தருண் கோபி, வேதிகா, சங்கீதா ஆகியோருடன் தியேட்டருக்கு சென்று சிவாஜி படம் பார்த்தார். படம் முடிந்து வெளியே அவர்களிடம் படம் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

இயக்குனர் தருண் கோபி கூறுகையில், மக்களிடையே கருப்பு பணத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதுபற்றி பாமர மக்களுக்கும் புரியும் வகையில் ஷங்கர் எடுத்துள்ளார்.

இதில் ரஜினி புது ஹீரோ அவதாரம் எடுத்து சினிமாவிற்கு புது ஹீரோ வந்திருப்பது போல் உள்ளது. அனைத்து இயக்குனர்களும், படம் இயக்கினால் சிவாஜி படம் போல் இயக்க வேண்டும் என நினைக்கும் வகையில் ஷங்கர் இயக்கியுள்ளார் என்று கூறினார்.

நடிகர் சிம்புவிடம் நிருபர்கள் சிவாஜி படம் குறித்து கருத்து கேட்டபோது, அவர் கையசைத்தவாறு பதில் கூற மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

Please Wait while comments are loading...