»   »  சிம்புவின் காளை- ரூ. 2 கோடிக்கு வாங்கிய தாசரி

சிம்புவின் காளை- ரூ. 2 கோடிக்கு வாங்கிய தாசரி

Subscribe to Oneindia Tamil

நிலா, சிம்பு, வேதிகா நிலா நடித்து பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கும் காளை படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளரும், மத்திய அமைச்சருமான தாசரி நாராயண ராவ் வாங்கியுள்ளார்.

தமிழ் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. ரீமேக் செய்தாலும் சரி, டப் செய்தாலும் சரி, அப்படியே வெளியிட்டாலும் சரி, எப்படி தெலுங்குக்குப் போனாலும் தமிழ்ப் படங்கள் செமத்தியாகி ஓடி வசூலைக் குவித்து விடுகின்றன.

சிம்புவின் மன்மதன், வல்லவன் ஆகிய இரு படங்களும் தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களாகி வசூலைக் குவித்தன.

இந் நிலையில் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள காளை மற்றும் கெட்டவன் படத்துக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

இதில் காளை படத்தின் டப்பிங் உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால் இதில் வென்றவர் தாசரி நாராயண ராவ்.

பழம் பெரும் தயாரிப்பாளரான தாசரி, காளையை ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளாராம்.

இதனால் சிம்புவின் அடுத்த படமான கெட்டவனுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு 5 கோடி வரை ரைட்ஸ் ரேட் போகும் என்கிறார்கள்.

சிம்புலு, கலக்குலு!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos