»   »  'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு?

'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலு விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வாலு என்று பெயருக்கு ஏற்றார்போல் அனுமார் வாலாக நீண்டு, ரசிகர்கள் முற்றிலும் பொறுமையை இழந்தபின்னர் வெளியான படம் வாலு.

Simbu Again Team Up with Vaalu Director

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் கதையே இல்லாமல் இப்படத்தை எடுத்த விஜய்சந்தர், படம் சந்தித்த சர்ச்சைகளால் மிகவும் புகழ்பெற்றார்.

இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை சிம்பு முடித்தவுடன் இந்தப்படத்தில் அவர் நடிப்பார் என்று கூறுகின்றனர்.

இந்தப் படத்தை 'மிருதன்' புகழ் மைக்கேல் ராயப்பன் தயாரிக்க வாய்ப்புகள் இருக்கின்றனவாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவின் நடிப்பில் உருவான கான் இடையில் நின்றுபோனாலும் கூட அவரின் கைவசம் தற்போது அச்சம் என்பது மடமையடா, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம் ஆகியவை உள்ளன.

மேலும் சிம்புவின் நடிப்பில் உருவான இது நம்ம ஆளு படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அடுத்தடுத்து புதிய படங்களில் சிம்பு ஒப்பந்தமாகி வருவது அனைவர் மனத்திலும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Sources Said Simbu Again Team Up with Vaalu Director Vijay Chander. The Official Announcement Can be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil