இப்படி தான் வெயிட்டை குறைச்சேன்... மிரள வைக்கும் சிம்புவின் வீடியோ
சென்னை : தான் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்பதை, ரசிகர்களுக்கு உதாரணமாக இருப்பதற்காக வீடியோவாக வெளியிட்டுள்ளார் சிம்பு. இதை பார்த்து பலரும் மிரண்டு போய் உள்ளனர்.
Recommended Video
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்ட சிம்பு, குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை துவக்கினார். வல்லவன், கோயில், தொட்டி ஜெயா, விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தவர் சிம்பு.
பல படங்களில் நடித்த சிம்பு கடந்த 10 ஆண்டுகளாக சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார். இதனால் சிம்புவின் உடல் எடையும் தொடர்ந்து அதிகரித்தது. அதே சமயம் அவர் நடித்த படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கினார் சிம்பு. படங்களின் தோல்விக்கு சிம்பு தான் காரணம் என தயாரிப்பாளர்கள் பலரும் மீடியா முன்பு குற்றம்சாட்டினர்.

சிம்புவிற்கு எதிர்ப்பு
பட ஷுட்டிங்கின் போது சிம்பு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. சிம்பு தாமதமாக வருவது, கால்ஷீட்டை மாற்றியதால் கூடுதல் செலவு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சிம்பு மீது வைத்தனர். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு போனது விவகாரம். இதனால் சிம்பு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார்.

உடம்பை குறைத்த சிம்பு
2020ல் வெளியான சிம்புவின் போட்டோவை பார்த்து அனைவரும் மிரண்டு போயினர். ஆனால் 2021 ல் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் தனது பழைய லுக்கிற்கு மாறி, மற்றொரு ஆச்சரியத்தை தந்தார் சிம்பு. 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது போடப்பட்ட லாக்டவுன் சமயத்தில் கடுமையான பல பயிற்சிகளை செய்து, உடல் எடையை குறைத்துள்ளார் சிம்பு. கடந்த ஆண்டு கூட சிம்பு என்பது இந்த அளவிற்கு உடம்பை குறைத்தார் என பலரும் ஆச்சரியமாக கேட்டு வந்தனர்.
சிம்பு வெளியிட்ட வீடியோ
மாநாடு படத்திலேயே மெஹருசைலா பாடல் உள்ளிட்ட சில காட்சிகளில் உடல் எடை அதிகரித்த தோற்றத்தில் இருக்கும் சிம்பு, அதற்கு பிற அப்படியே ஸ்லிம் தோற்றத்தில் நடித்திருப்பார். குண்டாக இருக்கும் காட்சிகள் லாக்டவுனிற்கு முன்பும், ஸ்லிம்மான காட்சிகள் லாக்டவுனிற்கு பின்பும் எடுக்கப்பட்டவைகளாம். ஆனால் தான் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்பதை தனது பிறந்தநாளன்று வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

105 டூ 72 கிலோ
The Journey of #ATMAN SilambarasanTR என்ற தலைப்பில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதோடு "Hope this journey of mine inspires countless more... God bless" என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவின் ஆரம்பத்தில் சிம்பு 105 கிலோ இருந்தாராம். தற்போது 72 கிலோவாக குறைந்துள்ளாராம்.

இதெல்லாம் செய்தாரா
வெறும் ஜிம்மில் ஓடி, ஒர்க்அவுட் செய்து மட்டும் சிம்பு உடல்எடையை குறைக்கவில்லையாம். பேஸ்கட்பால், ஃபுட்பால், பாட்மிண்டன், கிரிக்கெட், குதிரை ஏற்றம், சிலம்பம், பரதநாட்டியம், யோகா, களரி, சண்டை பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். உடல்எடையை மட்டுமின்றி உணவு பழக்கம் உள்ளிட்ட பல பழக்கங்களை மாற்றி, ஆளே டோட்டலாக மாறி வந்து தான் மாநாடு படத்தில் நடித்து, அதை பிளாக்பஸ்டர் படமாக்கி உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











