»   »  மொத்த படக்குழுவிற்கும் கபாலி 'முதல் நாள் முதல் காட்சி' ஏற்பாடு செய்த சிம்பு!

மொத்த படக்குழுவிற்கும் கபாலி 'முதல் நாள் முதல் காட்சி' ஏற்பாடு செய்த சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் மொத்தக் குழுவினருக்கும் 'கபாலி முதல் நாள் முதல் காட்சி ' டிக்கெட்டுகளை சிம்பு ஏற்பாடு செய்திருக்கிறார்.

ரஜினி, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் வருகின்ற 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 'கபாலி' வெளியீட்டால் பல படங்களின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Simbu Booked Kabali FDFS

ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்கள் பலரும் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'கபாலி' முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன.

இதனால் ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிம்பு தான் நடித்து வரும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் மொத்தக் குழுவினருக்கும் 'கபாலி' முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ''சிம்பு எங்களது படக்குழுவினர் அனைவருக்கும் 'கபாலி' முதல்நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்.

மகிழ்ச்சி'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

English summary
Simbu Booked Kabali First Day First Show for Anbanavan Asaradhavan Adangathavan Movie Crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil