»   »  'தல'யுடனான என் உறவை கெடுக்க முயற்சிக்க வேண்டாம்: சிம்பு

'தல'யுடனான என் உறவை கெடுக்க முயற்சிக்க வேண்டாம்: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் படங்களில் இனியும் அஜீத் பற்றி ரெபரென்ஸ் தேவையில்லை என்று கூறியது பற்றி நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சிம்பு ஃபேஸ்புக்கில் சேர்ந்த கையோடு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார். உங்களின் அச்சம் என்பது மடமையடா அல்லது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தல ரெபரன்ஸ் இருக்குமா, தல ரசிகர்கள் காத்திருக்கிறோம் என ஒருவர் கேட்டார்.

அதற்கு சிம்பு கூறியதாவது, அஜீத் சார் பற்றி யாருமே பேசாதபோது அவரது பிளாப் படத்தின் கட்அவுட்டை பயன்படுத்தி தல என கத்தினேன்..அதில் இருந்து அவர் பெரியவராக உள்ளார். அனைவரும் அவரின் பெயரை பயன்படுத்துகிறார்கள். அதனால் இனியும் அப்படி செய்ய வேண்டியது இல்லை. அவர் வளர்ச்சியில் மகிழ்ச்சி என்றார்.

அஜீத் ரசிகர்கள்

அஜீத் ரசிகர்கள்

இனி என் படங்களில் தல ரெபரன்ஸ் செய்யத் தேவையில்லை என்று சிம்பு எதார்த்தமாக கூறியதை சில ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு கோபம் அடைந்தனர்.

சிம்பு

தலயுடனான என் உறவை கெடுக்க முயற்சி செய்ய வேண்டாம். உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள். உண்மையான தல ரசிகர்கள் என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நானும் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் என சிம்பு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அஜீத்

அஜீத்

அஜீத்திற்கு நேரம் சரியில்லாத போது கூட நான் அவருக்கு ஆதரவாக இருந்தேன் என்பதை தான் சிம்பு அப்படி தெரிவித்தாராம். அதனால் அதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்கிறார்.

ரசிகன் டா

ரசிகன் டா

நான் தல ரசிகன் டா என்று பெருமையாக கூறி வருபவர் சிம்பு. இது தல ரசிகர்களுக்கும் தெரியும். இருப்பினும் அவர் கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Simbu tweeted that, 'Don't try to spoil my releationship with #Thala ur wasting ur time . #RealThalaFans will never let me down and I will never let him down .'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil