தப்பு தப்பா ஓட்டுற மச்சான்... மகத்தை வேற லெவலில் கலாய்த்த சிம்பு

சென்னை : நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிம்பு தன்னை கலாய்த்த வீடியோவை பகிர்ந்து, உணர்ச்சி பொங்க வாழ்த்து கூறி உள்ளார் நடிகர் மகத். இந்த வீடியோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு டைரக்டர்கள் அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாநாடு மேக்கிங் வீடியோ, பத்து தல டீசர், வெந்து தணிந்தது காடு ஸ்பெஷல் போஸ்டர் என படக்குழுவினரும் வெளியிட்டு அசத்தி உள்ளனர்.

மகத்தை கலாய்த்த சிம்பு

மகத்தை கலாய்த்த சிம்பு

இந்நிலையில் சிம்புவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான மகத் , சிம்பு தன்னை கலாய்க்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதோடு மிக உருக்கமாக, நீண்ட பதிவுடன் சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்தையும் மகத் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களின் வாழ்த்து குவிந்து வருகிறது.

தப்பு தப்பா ஓட்டுற மச்சான்

தப்பு தப்பா ஓட்டுற மச்சான்

மகத் வெளியிட்டுள்ள வீடியோவில், சிம்புவின் மியூசிக் ஸ்டூடியோவில் மகத் வீடியோ கேமில் கார் ரேஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் நின்றிருக்கும் சிம்பு, மகத்தை கலாய்த்துக் கொண்டே எப்படி விளையாடுவது என வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். காரை தவறான பாதையில் ஒட்டும் மகத்திடம், டேய் ஒழுங்கா ஓட்டுடா. மச்சான் நீ தப்பு தப்பா ஓட்டுற என சொல்லி சிரித்தபடி கலாய்க்கிறார் சிம்பு. இந்த வீடியோவை தான் மகத் பகிர்ந்துள்ளார்.

மகத்தின் உருக்கமான வாழ்த்து

மகத்தின் உருக்கமான வாழ்த்து

அதோடு மகத், எனக்கு மிகவும் பிடித்த நபர், என் மீது எப்போதும் அன்பை பொழியும் ஒருவர். ஒரு நண்பனாக என்னுடைய ஏற்ற-தாழ்வுகளில் கூடவே இருந்து என்னை வழிநடத்தும் சக்தியாக இருப்பவர். எனக்கு வழிகாட்டியாக எப்போதும் இருப்பவர். எனக்கும் எப்போதும் சிறப்பானவராக இருக்கும் ஒருவர். என்னுடைய ஒவ்வொரு அடியையும் கண்காணித்துக் கொண்டு, எனக்காக இருப்பவர் சிம்பு. இந்த அன்புக்கும், ஆதரவிற்கும் எப்போதும் நன்றி. ஹேப்பி பர்த் டே மச்சான். இதே போல் உன்னை சுற்றி நிறைய சந்தோஷங்கள் உன்னை சுற்றி பல காலங்கள் இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

மகத்தின் இந்த பதிவை பார்த்து விட்டு ஏராளமானவர்கள் சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹேப்பி பர்த் டே தலைவா, ஹேப்பி பர்த் டே சிம்பு, அண்ணா கேக் வெட்டலியா உங்க ஃபிரண்ட் பர்த்டேக்கு என கமெண்ட் செய்துள்ளனர். பலர் ரெட் ஹார்ட், ஹாட் எமோஜிக்களால் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X