»   »  யாராவது ஒருவர் சொல்லட்டும், உடனே சினிமாவை விட்டே போய்டுறேன்: சிம்பு ஆவேசம்

யாராவது ஒருவர் சொல்லட்டும், உடனே சினிமாவை விட்டே போய்டுறேன்: சிம்பு ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று யாராவது ஒரு இயக்குனராவது கூறினால் நான் சினிமாவை விட்டே விலகிவிடுகிறேன் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் சிறப்பாக கலாய்த்துள்ளனர்.

சிம்பு ரசிகர்கள் சிலரே தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிம்பு

சிம்பு

சிம்பு ஒருபோதும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார். அப்படி அவர் நேரத்திற்கு வந்துவிட்டால் அது உலக அதிசயத்தில் 8வது அதிசயம் என்ற பேச்சு உள்ளது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் நடிப்பை வெளிப்படுத்த தயாரான பிறகே நான் வீட்டில் இருந்து கிளம்புவேன் என்றார் சிம்பு.

மாட்டேன்

மாட்டேன்

இயக்குனர்கள் எதிர்பார்க்கும் நடிப்பை கொடுக்கும் மனநிலை வராத வரை நான் வீட்டில் இருந்து கிளம்ப மாட்டேன். இதற்காக யார் என்ன திட்டினாலும் கவலை இல்லை என்று சிம்பு தெரிவித்தார்.

டேக்

டேக்

சிம்பு ஒரு காட்சிக்கு 20, 25 டேக் வாங்கினார். அதனால் படப்பிடிப்பு தாமதமானது என்று ஒரு இயக்குனர் கூறினால் கூட நான் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்று சிம்பு கூறினார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

படங்களில் நடிக்கும் ஆசை போய்விட்டது, ரசிகர்களுக்காகவே நடித்து வருவதாக சிம்பு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகுவது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Simbu said that if even one director says that shooting is getting delayed because of my inability to act, I'll quit cinema.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil