»   »  தெலுங்கில் பாடும் சிம்பு

தெலுங்கில் பாடும் சிம்பு

Subscribe to Oneindia Tamil


தமிழில் தனது பாடல் திறமையை வெளிப்படுத்திய 'விரல் கலை' மன்னன் சிம்பு, அடுத்து தெலுங்கிலும் தனது குரல் 'வளையை' நீட்டப் போகிறாராம்.


நடிகராக, இயக்குநராக, ஸ்கிரிப்ட் ரைட்டராக தனது திறமையை நிரூபித்தவர் சிம்பு. இந்த இளம் வயதிலேயே சினிமாவின் பல துறைகளிலும் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு, பாடுவதிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

அவரது குரலில் வெளியான லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே மற்றும் தத்தை தத்தை ஆகிய இரு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனவை. இதையடுத்து வேறு சில தமிழ்ப் படங்களிலும் வேறு சில ஹீரோக்களுக்கு குரல் தானம் தந்தார் சிம்பு.

தற்போது அவரைத்தேடி தெலுங்குப் பாடல் ஒன்று வந்துள்ளதாம். தெலுங்கு ஸ்டார் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடிக்கும்
ஒக்கமகடு படத்தில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று பாலகிருஷ்ணாவே சிம்புவிடம் கேட்டுக் கொண்டாராம்.

தனக்கு தெலுங்கு தெரியாவிட்டாலும் கூட பாடலின் ட்யூன் சிம்புவைக் கவரவே ஓ.கே. என்று கூறி விட்டாராம். இந்தப் பாடலைப் பாடுவதற்காக தெலுங்கு உச்சரிப்பில் தற்போது தீவிர கவனம் செலுத்தி ஹோம் ஒர்க் செய்து வருகிறாராம்.

இதற்கிடையே, கெட்டவன் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டேன் என்று ஆரம்பத்தில் பிடிவாதமாக இருந்த சிம்பு தற்போது தலைப்பை மாற்ற தயாராகி விட்டதாக தெரிகிறது. கெட்டவன் என்ற டைட்டிலுக்குப் பதிலாக இன்னொரு தலைப்பை அவர் ரெடி செய்து விட்டாராம். விரைவில் அவரே அதை அறிவிப்பாராம்.

Read more about: balakrishnan, ntr, simbu, teulgu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil