»   »  அஜீத் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சிம்பு!

அஜீத் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கான பெயரை, மே 1 ல் தெரிவிப்பதாக ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

சிம்பு தற்போது 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கான பெயரை மே 1ல் அறிவிப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

Simbu Next Movie Details

மேலும் 3 வேடத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் ஆரம்ப எழுத்துக்கள் மூன்றுமே ஏயில்(A) தொடங்கும் என ரசிகர்களுக்கு ஒரு க்ளூவையும் கொடுத்திருக்கிறார்.

இதனை வைத்துப் பார்க்கும்போது சிம்புவின் கதாபாத்திரங்களின் பெயர் படத்தின் தலைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா, வெர்ஜின் மாப்பிள்ளை என இளைஞர்களைக் கவரும் வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய படங்களுக்கு பெயர் வைத்து வருகிறார்.

அந்த வரிசையில் சிம்பு படமும் இணையுமா?

English summary
Director Adhik Ravichandran says "Simbu Next Movie Title Announced on May 1st".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil